தோட்டக்கலை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இந்தியாவிலேயே பெரிய கார்டன் சென்டர் : ஸ்டேன்ஸ் நிறுவனம் சார்பில் துவக்கம்!!

Author: Udayachandran RadhaKrishnan
14 March 2022, 9:07 am

கோவை : தோட்டக்கலை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இந்தியாவிலேயே பெரிய கார்டன் கோவை திருச்சி சாலையில் துவங்கப்பட்டுள்ளது.

கோவையில் உள்ள பழமையான நிறுவனங்களுள் ஒன்றான ஸ்டேன்ஸ் நிறுவனம் கலப்பு உரங்கள் மற்றும் விவசாய இடு பொருட்களை தயாரித்து வருகிறது. இந்த நிலையில் தோட்டங்கள் மற்றும் வீடுகளுக்கு தேவையான செடிகளை விற்பனை செய்யும் ஒரு ஏக்கர் பரப்பிளான கார்டனை ஸ்டேன்ஸ் நிர்வாகம் துவக்கியுள்ளது.

இதனை பாரதிய வித்யா பவன் தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர், தமிழ்நாடு வேளாண் பல்கலை., பதிவாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இதுகுறித்து ஸ்டேன்ஸ் இயக்குனர் லட்சுமி நாராயணசாமி கூறியதாவது: இந்த நிறுவனத்தில் 15 வகையான இயற்கை உரங்கள் உள்ளன. மண்வளத்தை அதிகரித்தால் தான் தாவரங்கள் நன்கு வளரும். அவ்வாறு ஒரு விதை முளைப்பதில் இருந்து அறுவடை வரையில் தாவரத்தை பாதுகாப்பதற்கான பொருட்களை எங்கள் நிறுவனம் தயாரிக்கிறது.

சுற்றுச்சூழலுடன் இணைந்து பயணித்து வருகிறோம். தமிழகத்திலேயே இவ்வளவு பெரிய கார்டன் இல்லை. 1 ஏக்கர் பரப்பளவில் 450க்கும் மேற்பட்ட வகைகளில் 15 ஆயிரம் தாவரங்கள் இங்கு உள்ளன. இது ஆர்கானிக் கார்டனாக உள்ளது. அனைத்து வகையான நாட்டு மரங்களும் உள்ளன.

இந்தியாவில் முதல் முறையாக வேப்ப மர சாற்றை பூச்சிக்கொல்லியாக மாற்றிய எங்கள் நிறுவனம் தான். நாட்டு விதைகள் மற்றும் நாட்டு வகை செடிகளை மட்டுமே நாங்கள் ஊக்குவிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், ஸ்டேன்ஸ் வர்த்தக மேலாண் மேளாளர் கல்யாணி நாராயணசாமி, சர்வதேச வணிக துறை தலைவர் ஜான்சன், வர்த்தக தலைவர் ஜான் மேத்யூ ஆகியோர் கலந்து கொண்டனர்.

  • Captain Vijayakanth first death anniversaryகேப்டன் விஜயகாந்த் நினைவு நாள்…கண் கலங்கிய சினிமா பிரபலங்கள்..!
  • Views: - 1178

    0

    0