60 ஆண்டுகளுக்கு முன்பு சொன்ன அருள்வாக்கு… பீதியில் பொங்கல் பண்டிகையை தவிர்த்து வரும் கிராமம்… அப்படி என்ன சொன்னார் தெரியுமா..?

Author: Babu Lakshmanan
17 January 2023, 10:00 am

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்துார் அருகே, அத்தனுார் எட்டுப்பட்டி கிராம மக்கள், கடந்த 60 ஆண்டுகளாக பொங்கல் பண்டிகையை கொண்டாடாமல் தவிர்த்து வந்துள்ளனர்.

வெண்ணந்துாரை அடுத்துள்ள அத்தனுார், ஆயிபாளையம், கோம்பக்காடு, அத்தனுார்புதுார், தட்டான்குட்டைபுதுார், ஆலங்காடுபுதுார், உடும்பத்தான்புதுார், தாசன்புதுார் ஆகிய எட்டு கிராமங்களில் கடந்த 60 ஆண்டுகளாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதில்லை. இந்த கிராமங்களில் 2,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில், விசைத்தறி, விவசாயம், கால்நடை வளர்ப்பு ஆகியவை பிரதான தொழிலாக இருக்கிறது.

கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு, நிலச்சுவான்தாரர் ஒருவர் பொங்கல் பண்டிகையை மிக விமரிசையாக கொண்டாடியதாகவும், அந்த சமயம் ஊரில் உள்ள பெரும்பாலானோருக்கு அம்மை நோய் பாதிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து, ஊர் மக்கள் பிரசித்தி பெற்ற அத்தனுார் அம்மனிடம் முறையிட்டனர்.

அப்போது, அங்குள்ள ஒருவர் அருள்வாக்கு கூறியுள்ளார். பொங்கல் பண்டிகை கொண்டாடியதால் தான் ஊரில் உள்ள மக்களுக்கும், கால்நடைகளுக்கும் அம்மை நோய் வந்துள்ளதாகவும், இனிமேல் பொங்கல் பண்டிகையை கொண்டாட வேண்டாம் என சொன்னதாக அப்பகுதியில் கூறுகின்றனர்.

எனவே, மக்கள் மற்றும் கால்நடைகளின் நலன்கருதி இந்த எட்டு கிராம மக்களும் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதில்லை என முடிவு செய்து பின்பற்றி வருகின்றனர்.

  • gangai amaran singing for bharathiraja video viral on internet பாட்டு பாடி பாரதிராஜாவை ஆற்றுப்படுத்திய கங்கை அமரன்… மனதை நெகிழ வைத்த வீடியோ…