ஓபிஎஸ்க்கு கடைசி வாய்ப்பு…. மீண்டும் பரபரப்பில் அதிமுக : வெளியான தகவல்!!
Author: Udayachandran RadhaKrishnan26 February 2023, 2:42 pm
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் நேற்று உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வெளியிட்டது. அதில், கடந்த ஜுலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்மூலம், எடப்பாடி பழனிசாமி கையில் அதிமுக முழுமையாக வந்துவிட்டது. இதனை அவரது ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர்.
அதேவேளையில், நீதிமன்றத்தில் இந்த உத்தரவால், ஓ.பன்னீர்செல்வம் உள்பட அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கியதும் செல்லத்தக்கதாகி விட்டது.
இதனிடையே உச்ச நீதிமன்ற தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக இருந்தாலும், தங்களுக்கு இந்த தீர்ப்பு இன்னும் பாதகமாக இல்லை என ஓபிஎஸ் தரப்பு கூறுகிறது.
இது குறித்து வைத்திலிங்கம், பொதுக்குழு கூட்டியது செல்லும் என்று தீர்ப்பு வந்துள்ளது. ஆனால் சிவில் கோர்டில் உள்ள வழக்கில் எங்கள் தீர்ப்பு கட்டுப்படுத்தாது என உச்ச நீதிமன்றம் கூறிய
பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் சொல்லவில்லை. நாங்கள் தீர்மானங்களை எதிர்த்து வழக்கு தொடருவோம்.
ஆனால் இது எங்களுக்கு பெரிய பாதிப்பு கிடையாது என்றார். எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததால் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், ஓபிஎஸ் தரப்போ அதில் தொடர் புள்ளிகளை வைத்து வருவதால் மீண்டும் அ.தி.மு.க.,வில் பரபரப்பு தொடர்கிறது.
இதற்கிடையே சிவில் வழக்கில் தீர்ப்பு வருவதற்குள் இபிஎஸ் அதிமுகவில் வலுவான தலைவராக உருவெடுத்துவிடுவார், அதனால் பெரிய பாதிப்பு ஏற்படாது என அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.