பெண்கள் வெளியே வர பயப்படறாங்க.. தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுள்ளது : முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி குற்றச்சாட்டு!!
Author: Udayachandran RadhaKrishnan1 May 2022, 8:47 pm
கோவை : தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. பெண்கள் வெளியேவர அச்சப்படும் சூழ்னிலை ஏற்பட்டுள்ளது என அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
கோவை சுகுணாபுரம் பகுதியில் உள்ள “நூருல் இஸ்லாம் அனபி சுன்னத் ஜமாத்” பள்ளிவாசலில் புனித ரமலான் நோன்பு துறப்பு நிகழ்ச்சியான இப்தார் விருந்து நிகழ்ச்சி அதிமுக சார்பில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட எஸ்பி வேலுமணி இஸ்லாமிய சகோதரர்களுடன் அமர்ந்து நல்லினக்கத்தை பிரதிபலிக்கும் விதமாக நோன்பு கஞ்சி அருந்தி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இதில் அதிமுக சிறுபான்மை பிரிவை சேர்ந்த சிடிசி ஜபார், மேட்டுப்பாளையம் நாசர் உட்பட அதிமுக தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த எஸ்.பி.வேலுமணி. கழகம் சார்பாக அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துகொண்டார். புனித ஹஜ் யாத்திரை மானியத்தை மத்திய அரசு ரத்து செய்தபோதும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அம்மாவின் , அரசு 6 கோடியை மானியமாக வழங்கியது.
கோவை மாவட்ட ஜமாத் அமைப்பினர் நிகழ்ச்சியில் எடப்பாடி 6 கோடியை 10 கோடியாக உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டார். மேலும் நாகூர் தர்காபள்ளி வாசல் மதில் சுவர் புனரமைப்பு பணிக்கு 5.40 கோடி ஒதுக்கி பணிகளை செய்து முடித்தது மாண்புமிகு அம்மாவின் அரசு என்று தெரிவித்தார்.
மேலும் புனித ஹஜ் யாத்திரைக்கு ரூ.14 கோடி நிதி ஒதுக்கி தந்ததும் அண்ணன் எடப்பாடியார் ஆட்சியில்தான் உலமாக்களுக்கு இலவச மிதிவண்டி அறிவித்தது. ஓய்வூதியம் உயர்த்தி அறிவித்ததும் அதிமுக ஆட்சியில்தான்.
மேலும் நோம்பு கஞ்சிக்கு 3000 பள்ளி வாசலுக்கு 5145 டன் அரிசு வழங்கியது அம்மாவின் அரசு சிறுபான்மையினருக்கு என்றும் பாதுகாப்பான் அரசாக இருப்பது மாண்புமிகு அம்மாவின் அரசு தற்பொழுது மின்விட்டு, சாலை பிரச்சனை கடந்த ஆண்டு சீராக இருந்தது.
தற்போது மாநகராட்சி 300 சாலைகள், 200 புறநகர் சாலை பணிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆட்சியர்களும், அதிகாரிகளும் ஏன் இப்படி உள்ளனர். கோவையை புறக்கணிக்கிறார்களா? மக்கள் வரி செலுத்துகிறார்கள், அவர்களுக்கான பணிகளை அதிகாரிகள் நடுநிலையுடன் செய்யுங்கள், வெகு விரைவாக பணிகளை முடிக்க வேண்டும்.
ஸ்மார்ட் சிட்டி நல்ல திட்டம் 100 ல், 11 தமிழகத்திற்காக அன்றய முதல்வர் அம்மா பெற்றுதந்தார். அதில் கோவையும் ஒன்று, பொழுதுபோக்கிற்காக நன்றாக பணிகளை செய்து முடித்துள்ளோம்.
இந்த அரசு முறைபடுத்தவில்லை, தற்பொழுது குப்பைகளும், டைல்ஸ்கள் உடைந்தும் பராமரிப்பின்றி காணப்படுகிறது. கோவை மாநகராட்சி செயல்படாத மாநகராட்சியாக உள்ளது.
தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுக்கம் பாதிக்கப்பட்டதுள்ளது. திமுக அரசு விளம்பரத்தில் தான் இந்த அரசு ஓடுகிறது. விலைவாசி அதிகரித்துள்ளது, அரசு தனது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும், முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
0
0