சாதி, மதம் பார்த்து தலைவர்களை தேர்வு செய்யக்கூடாது : திருச்சி எம்பி துரை வைகோ பரபரப்பு பேச்சு!
Author: Udayachandran RadhaKrishnan26 April 2025, 6:53 pm
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
இதையும் படியுங்க: தவெகவை விட பலத்தை காட்ட வேண்டும்… பரபரப்பை கிளப்பிய அதிமுக மூத்த தலைவர்!
இதில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்பு வாரிய திருத்த சட்ட மசோதாவை கண்டித்தும், தமிழ்நாட்டின் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனம் தொடங்கி பல்வேறு விவகாரங்களில் ஆளுநர் ரவி – தமிழ்நாடு அரசு இடையே மோதல் போக்கை ஏற்படுத்தும் ஆளுநர் ஆர்.என் ரவி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி 200 க்கும் மேற்பட்ட கண்டன கோஷங்களை எழுப்பினர்.
தொடர்ந்து மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ பேசுகையில் “ஜம்மு காஷ்மீர் தீவிரவாதிகள் தாக்குதல் விவகாரத்தில் எந்த ஒரு மதமும் இதுபோன்ற இழிச்செய்லகளை ஆதரிப்பதில்லை. சமூக வலைத்தளங்களில் தவறாக பரப்பி வரும் மத வாத சக்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

இந்த தாக்குதலை மதவாத சக்திகள் வேறு விதமாக கொண்டு சென்று அரசியல் செய்ய பார்க்கிறார்கள். வலதுசாரி அரசியலை நான் என்றைக்கும் எதிர்ப்பேன் என்று சொல்லியிருந்தேன். வலது அரசியல் நம் நாட்டை விட்டு போக வேண்டும்.
ஒரு மனிதன் நல்லவரா? கெட்டவரா என்ற அடிப்படையில் தலைவர்களை தேர்ந்தெடுங்கள். சாதி, மத்ததின் அடிப்படையில் ஒரு போதும் தலைவர்களை தேர்ந்தெடுக்காதீர்கள். நாட்டில் நடக்கும் அனைத்து தாக்குதலுக்கு காரணம் வலது சாரி அரசியல் தான்.
வக்பு வாரிய திருத்தச் சட்டத்தை திரும்பப் பெரும் வரை மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் மதிமுக தொடர்ந்து போராடும். மத வாத அரசியல் ஒழிய வேண்டும்” என்றார்.