பணம் கொடுத்து ஆள் சேர்த்த அண்ணாச்சி.. இசை நிகழ்ச்சிக்கு இத்தனை கோடிகள் செலவளிக்கப்பட்டதா.? வெளியான தகவல்!
Author: Rajesh3 June 2022, 11:25 am
தமன்னா, ஹன்சிகா, பூஜா ஹெக்டே, ஊர்வசி ரவுட்டேலா,யாஷிகா ஆனந்த், ராய் லக்ஷ்மி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஸ்ரீலீலா, நுபுர் சனோன், டிம்பிள் ஹயாத்தி என பல நடிகைகள் கலந்து கொண்டனர். மேலும் படத்தின் டிரைலருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படத்திற்காக அண்ணாச்சி பல கோடிக் கணக்கில் செலவு செய்துள்ளார். ஆனால் படம் வெளியான பிறகு அந்த அளவுக்கு லாபம் இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏனென்றால் படத்திற்கு கிடைத்த வரவேற்பை காட்டிலும் கடுமையான விமர்சனங்களும் எழுந்துள்ளது. ஆனால் தற்போது தி லெஜன்ட் படத்தை வாங்குவதற்கு இரண்டு பெரிய நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறது.
இப்படம் அடுத்த மாதம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது. தற்போது மதுரை அன்புச்செழியனும், ஏஜிஎஸ் நிறுவனமும் இப்படத்தை வாங்க முன் வந்துள்ளனர். ஏனென்றால் இப்படத்தில் ஏகப்பட்ட பிரம்மாண்ட காட்சிகள் வைக்கப்பட்டுள்ளதாம். மேலும் ஆரம்பத்திலிருந்தே இப்படத்திற்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்து வருகிறார் அண்ணாச்சி.
இதனிடையே இசை வெளியிட்டு விழாவினை நடத்துவதற்கு மட்டும் அண்ணாச்சி 6.5 கோடி ரூபாய் செலவு செய்துள்ளாராம். இது போக பாலிவுட் நடிகை காத்ரீனா கைஃப்பையும் இசை வெளியீட்டு விழாவிற்கு அழைத்திருந்தாராம். அதற்காக அவருக்கு 3 கோடி கொடுத்திருந்தாராம். ஆனால் இறுதி நேரத்தில் வர முடியவில்லை என காத்ரீனா பணத்தை திரும்ப அனுப்பி விட்டாராம். காத்ரீனாவும் வந்திருந்தால் இசைவெளியீட்டு விழா பட்ஜெட் 10 கோடியை தொட்டிருக்கும் என பேசப்படுகிறது.