₹2.36 லட்சத்துக்கு விலை போன எலுமிச்சை.. முருகன் கோவிலில் குழந்தை பாக்கியம் வேண்டி எலுமிச்சை சாப்பிடும் விநோத திருவிழா!
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகேயுள்ள ஒட்டனந்தல் கிராமத்தில் இரட்டைக் குன்றின் மீது ரத்தினவேல் முருகன் கோவில் உள்ளது.
கருவறையில் வேல் மட்டுமே உள்ள இந்த கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 15 ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. விழாவின் இறுதி நாளன்று பங்குனி உத்திர திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு நடத்தப்படும் உற்சவ காலங்களில் தினமும் வேலில் சொருகப்படும் 9 நாள் எலுமிச்சம் பழங்களை இடும்பன் பூஜையில் வைத்து ஏலம் விடும் நிகழ்ச்சி இரவு நடைபெற்றது.
இந்த எலுமிச்சை பழத்தினை குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் வாங்கி சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் எனவும், விரைவில் திருமணம் நடைபெறும் எனவும் நம்பப்படுகிறது.
இதனால் ஏல நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பல மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் வருகை தந்தனர். இடும்பன் பூஜைக்கு பிறகு கோயிலின் தலைமை பூசாரி ஆணி பதித்த காலனியில் நின்று ஏலத்தை தொடங்கினார்.
அதனை தொடர்ந்து பூசாரிகள் ஏலத்தை நடத்தினர். குழந்தை பாக்கியம் தரக்கூடிய முதல் உற்சவ எலுமிச்சை பழம் 50,500 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது.
மொத்தமாக ஒன்பது பணமும் ஏலம் விடப்பட்டது குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் ஒன்பது பழங்களையும் வாங்கி மென்று சாப்பிட்டனர் மொத்தமாக 2,36,100 இரண்டு லட்சத்து 36 ஆயிரத்து நூறு ரூபாய்க்கு ஏலம் போனது.
அதிகபட்சமாக குழந்தை பாக்கியம் வேண்டி தி. கொளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த அருள்தாஸ் கனிமொழி தம்பதியினர் ஏலம் எடுத்தனர்.
எலுமிச்சை பழத்தை ஏலம் எடுத்தவர்கள் உடலில் தண்ணீரை ஊற்றுக் கொண்டு பூசாரி முன்பு மண்டியிட்டு புடவையின் முந்தானையில் எலுமிச்சை பழத்தினை பெற்றுக் கொண்டனர்,
இறுதியாக இடுமனுக்கு படைக்கப்பட்ட கருவாட்டு குழம்பு கலந்த சாதம் பிரசாதமாக அனைவருக்கும் வழங்கப்பட்டது.
இந்த வினோத திருவிழாவில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கிராமங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா என்று முழுக்க மட்டும் முருகனை வழிபட்டு சென்றனர்..
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.