தமிழக அரசு ரொம்ப பெரிய தப்பு பண்ணிருச்சு… இதுக்கு தக்க பதிலடி கொடுப்போம்… விஜய் ரசிகர்கள் ஆவேசம்!!

Author: Babu Lakshmanan
19 October 2023, 10:36 am
Quick Share

பல்வேறு கட்டுப்பாடுடன் திருச்சியில் லியோ படம் வெளியான நிலையில், தமிழக அரசுக்கு ரசிகர்கள் பதிலடி கொடுப்பார்கள் என்று விஜய் ரசிகர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் லியோ. இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், கௌதம்மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

இதற்கு முன்பு வெளியான படத்தின் அப்டேட்கள், பாடல்கள் மற்றும் டிரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள நிலையில், தமிழக அரசின் சார்பில் படத்திற்கு சிறப்பு காட்சி திரையிடவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், காலை 4 மணி காட்சிகள் கேட்டு பட தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தை நாடினாலும் அவர்களின் முயற்சி வெற்றி பெறவில்லை.

அதேபோல், காலை 7 மணி காட்சி கேட்டு தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தபோதும், அதற்கும் தமிழக அரசு அனுமதி அளிக்காத நிலையில், இன்று லியோ படம் வழக்கமாக காலை 9 மணிக்கு காட்சி திரையிடப்பட்டது.

ஏற்கனவே லியோ திரைப்பட ஆடியோ வெளியீடு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்ட நிலையில், லியோ திரைப்படம் கடந்த சில வாரங்களாக பல சர்ச்சைகளில் சிக்கியது புகைபிடிப்பதை ஊக்குவிப்பது தொடர்பாக படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை விமர்சித்த நிலையில், டிரெய்லரில் விஜய் கெட்டவார்த்தை பேசியது தொடர்பாக பெரும் சர்ச்சை வெடித்தது. இதற்கிடையில், படத்தின் ப்ரீ-புக்கிங் மட்டும் சுமார் 34 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் மூலம், ஜெயிலரின் முதல் நாள் வசூலை முறியடித்து இப்படம் பாக்ஸ் ஆபிஸில் முதல் நாளில் ரூ.70 கோடிக்கும் அதிகமாக வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்று தமிழ்நாடு முழுவதும் லியோ திரைப்படம் காலை 9 மணிக்கு திரையிடப்பட்டது. பல்வேறு இடங்களில் அவரது ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்து நடனமாடி கொண்டாடினர்.

இந்நிலையில், திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள சோனா- மீனா திரையரங்கில் நடிகர் விஜய் ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்து நடனம் ஆடி, தங்களுடைய கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினர். பின்பு படம் பார்க்க வரும் ரசிகர்களை முழுமையாக சோதனை செய்து அவர்களை திரைஅரங்கிற்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். முன்னதாக திரையரங்கம் வெளியே நடனமாடிய விஜய் ரசிகர்களிடம் திரையரங்கில் பணிபுரியக்கூடிய பணியாளர்கள் நடனம் ஆடக்கூடாது என கட்டுப்பாடு விகித்தனர்.

இதனை தொடர்ந்து நடிகர் விஜய் ரசிகர்கள் பேசியதாவது ;- லியோ திரைப்படத்திற்கு மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது தவறு. விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. ஆனால் இந்த கட்டுப்பாடுகள் சர்ச்சைகள் தான் லியோ படத்தின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. நிச்சயமாக இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடையும் என்று நம்பிக்கை உள்ளது. தமிழக அரசுக்கு நடிகர் விஜய் ரசிகர்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள், என தெரிவிக்கின்றனர்.

திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் காவல் துறையினரின் கட்டுப்பாடு காரணமாக பேனர் வைப்பது தடுக்கப்பட்டது. மேலும் படங்கள் திரையிடும்போது தியேட்டர் முன்பாக ரசிகர் வரவேற்பு வளைவு வைப்பது வழக்கம் ஆனால் இந்த முறை வரவேற்பு வளைவு வைக்க கூடாது என்று சொன்னபடியினால் அதனையும் வைக்கவில்லை.

  • jeyam ravi “எல்லாம் நடிப்பா கோபால்”? ஆஜரான ஜெயம் ரவி… எஸ்கேப் ஆன மனைவி – நீதிமன்றம் அதிரடி முடிவு!
  • Views: - 380

    0

    0