சாலையில் சென்ற வாகனம் மோதி கால்களை இழந்து சீறிய சிறுத்தை.. துடிதுடித்து உயிரிழந்த சோகம்!

Author: Udayachandran RadhaKrishnan
31 January 2025, 11:24 am

சாலையில் சென்ற வாகனம் மோதி கால்களை இழந்த சிறுத்தை.. வாகன ஓட்டிகளிடம் சீறிய காட்சி!

சாலையில் சென்று கொண்டிருந்த வாகனம் மோதி காலை இழந்து நடக்க இயலாத நிலையில் சீறும் சிறுத்தை.

தெலுங்கானா மாநிலம் மேதக் மாவட்டம் நரசிங்கி மண்டலத்தில் உள்ள வல்லூரு கிராமம் அருகே தேசிய நெடுஞ்சாலை எண் 44 ல் சாலையை கடந்து சென்ற சிறுத்தை ஒன்றின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி அந்த சிறுத்தையின் பின் கால்கள் இரண்டும் கடுமையாக சேதம் அடைந்து விட்டன.

இதையும் படியுங்க: இதுவரை 6 பேர் கைது.. ஈசிஆர் சம்பவத்தில் முக்கியப் புள்ளிகளா?

இதனால் நடக்கவே இயலாமல் சாலை நடுவே பார்க்கவே பரிதாபமாக அந்த சிறுத்தை அறற்றியவாறு உட்கார்ந்து இருந்தது.

Leopard Dies

சிறுத்தையின் நிலையை பார்த்து அந்த வழியாக சென்ற சிலர் பரிதாபபட்ட நிலையில் வேறு சிலர் அதைக் கடந்து சென்றனர். மேலும் சிலர் அந்த சிறுத்தையின் அருகில் சென்று வம்பு இழுக்க முயன்றனர்.

ஆனால் அடிபட்ட அந்த சிறுத்தை காலே போனாலும் என்னுடைய வேட்டையாடும் குணம் மாறாது என்பதை நிரூபிக்கும் வகையில் வம்பு இழுக்க வந்தவர்களை நோக்கி பின் கால்களை இழுத்து நகர்ந்து சீறி பாய்ந்தது.

Leopard

இதனால் வம்பு இழுக்க வந்தவர்கள் நமக்கேன் வம்பு என்று ஒதுங்கி விட்டனர். சிறுத்தை வாகனத்தில் அடிபட்டது பற்றி வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி