கல் குவாரிக்குள் நுழைந்த சிறுத்தை : நாயை வேட்டையாடிய பதைக்க வைக்கும் காட்சிகள்!!!
Author: Udayachandran RadhaKrishnan28 ஜனவரி 2023, 3:10 மணி
சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகரில் அமைந்துள்ள கல் குவாரி ஒன்றில் படுத்துக் கொண்டிருந்த காவல் நாய் ஒன்றை சிறுத்தை தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பவானிசாகர் வனப்பகுதியை ஒட்டி சுமார் பத்துக்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருகின்றன.
இந்த குவாரிகள் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளதால் பவானிசாகர் வனப் பகுதியில் இருந்து வெளியேறும் வனவிலங்குகள் அவ்வப்போது கல்குவாரி உரிமையாளர்கள் வளர்த்து வரும் காவல் நாயை வேட்டையாடி வருவது வாடிக்கையாகி வருகின்றன.
இந்நிலையில் நேற்று இரவு சுமார் பத்து மணி அளவில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய சிறுத்தை ஒன்று டாம் க்ரிஷர் என்ற கல்குவாரியில் புகுந்து அங்கு படுத்துக் கொண்டிருந்த காவல் நாயை தாக்க முற்பட்டபோது.
சிறுத்தையை கண்டு அச்சம் அடைந்த காவல் நாய் சத்தம் எழுப்பி தப்பித்தது. பின்னர் கல்குவாரியில் இருந்த இரண்டு காவல் நாய்கள் தொடர்ந்து சத்தம் எழுப்பிதால் சிறுத்தை வனப்பகுதிக்குள் சென்று மறந்தது.
இதன் சிசிடிவி காட்சி வெளியாகிய தற்போது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து காவல் நாய்களை வேட்டையாடும் சிறுத்தையை பவானிசாகர் வனத்துறையினர் கல்குவாரி அருகாமையில் கூண்டு வைத்து சிறுத்தையை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
0
0