மருதமலை கோயிலில் சிறுத்தை நடமாட்டம் : தங்கரதம் அருகே அமர்ந்து ஓய்வு எடுத்த அதிர்ச்சி காட்சி..!! (வீடியோ)

Author: Udayachandran RadhaKrishnan
28 May 2022, 1:37 pm

கோவை : ஏழாம் படை வீடு என அழைக்கப்படும் மருதமலை கோவிலில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் பக்தர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

தினமும் பத்துக்கும் மேற்பட்ட‌ நாய்கள் இறந்து வந்த நிலையில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதி செய்தனர் கோவில் ஊழியர்கள்.

ஏழாம் படை வீடு என்று அழைக்கப்படும் கோவை மருதமலையில் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் மலைப்பகுதியில் அமைந்துள்ளது.

இக்கோவிலுக்கு உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம். இக்கோவில் அதிகாலை 6 மணி முதல் நடை திறக்கப்பட்டு இரவு ஏழு முப்பது மணி வரை கோவில் இயங்கி வருகிறது. மலை மற்றும் அடிவாரப் பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அவ்வப்போது இருந்து வருகிறது.

மருதமலை கோவிலை ஒட்டிய மலைவாழ் மக்கள் கிராமம் உள்ளது. இவர்கள் வளர்த்துவரும் நாய்கள் கடந்த சில தினங்களாக மர்மமான முறையில் காணாமல் போய் உள்ளது. இதுகுறித்து கோவில் மற்றும் மலைவாழ் மக்கள் மத்தியில் கடந்த சில வாரங்களாகவே பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் நேற்று கோவிலில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை ஊழியர்கள் ஆய்வு செய்தனர். அப்பொழுது அதிகாலை 5 மணி அளவில் சிறுத்தைப்புலி ஒன்று தங்கரதம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இடத்தில் வருவது பதிவாகி இருந்தது.

இந்த சிசிடிவி காட்சி எனவே கோவில் ஊழியர்கள் , மலைவாழ்மக்கள் உள்ளிட்டோருக்கு மிக வேகமாக பரவி அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

  • vadivelu trying to hit the car of goundamani and senthil car கவுண்டமணியின் காரை இடிக்க வந்த வடிவேலுவின் கார்! இப்படியெல்லாம் நடந்துருக்கா?