சாலையில் சென்ற வாகனத்தை வழிமறித்து எச்சரித்த சிறுத்தை : விடாமல் துரத்திய காட்சி வைரல்!!
Author: Udayachandran RadhaKrishnan25 March 2022, 9:21 pm
ஈரோடு : சத்தியமங்கலம் அடுத்த தலமலை வனச்சாலையில் சென்ற வாகனத்தை சிறுத்தை ஒன்று எதிர்த்து நின்று துரத்தும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் மான் யானை சிறுத்தை புலி காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் வருகின்றன.
தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருவதால் உணவு மற்றும் நீர் தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறும் வனவிலங்குகள் சாலையைக் கடப்பது வாடிக்கையாகி வருகின்றன.
இந்நிலையில் திம்பம் சோதனை சாவடியில் இருந்து தலமலை வழியாக தாளவாடி செல்லும் வனச்சாலையில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய சிறுத்தை ஒன்று அவ்வழியாக வந்த காரை எதிர்த்து நின்று துரத்தி உள்ளது.
இதை அந்த காரில் வந்த நபர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். இதன் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.