வெடி மருந்து தொழிற்சாலையில் புகுந்த சிறுத்தைகள்.. தொழிலாளர்கள் அச்சம் : ஷாக் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
7 March 2024, 9:43 pm

வெடி மருந்து தொழிற்சாலையில் புகுந்த சிறுத்தைகள்.. தொழிலாளர்கள் அச்சம் : ஷாக் வீடியோ!!

நீலகிரி மாவட்டத்தை பொருத்த அளவில் 65% வனப்பகுதிகளை கொண்ட மாவட்டமாகும். இங்கு காட்டெருமைகள் புலி சிறுத்தை கரடிகள் என அனைத்து வகையான விலங்குகளும் அவ்வப்போது நகரப் பகுதி மற்றும் குடியிருப்பு பகுதியில் வலம் வருவது வழக்கம் தான்.

இந்நிலையில் குன்னூர் அருகே உள்ள அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலை வளாகத்தில் நான்கு சிறுத்தைகள் இரவு நேரத்தில் உள்ளே புகுந்துள்ளது. அதனை வீடியோ பதிவு செய்துள்ளனர் தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பாதுகாப்பு நிறைந்த வெடிமருந்து தொழிற்சாலை பகுதியில் சிறுத்தை நுழைந்தது தொழிற்சாலை தொழிலாளர்கள் மற்றும் குடியிருப்பு வாசிகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது இதே போல் கடந்த வாரம் குன்னூர் ராணுவ பயிற்சி கல்லூரி பகுதியில் இரவு வேளையில் கரடி நடமாடியது குறிப்பிடத்தக்கது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி