விதியை மாற்றுவோம் விக்கிரவாண்டியில்.. திமுக அதிமுகவுக்கு நிகராக களமிறங்கும் த.வெ.க?!!
Author: Udayachandran RadhaKrishnan21 September 2024, 1:27 pm
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு குறித்து அக்கட்சியின் தலைவர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டு இருப்பவர் விஜய்.
கடந்த பிப்ரவரி மாதம் தான் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்னும் தன் கட்சியின் பெயரை அறிவித்திருந்தார். அதோடு வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் நேரடியாக களத்தில் இறங்கி போட்டியிட இருப்பதாக விஜய் அறிவித்திருந்தார்.
அதற்கான வேலைகளிலும் கட்சி நிர்வாகிகள் செயல்பட்டு இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் சில வாரங்களுக்கு முன் பனையூரில் உள்ள தன்னுடைய கட்சி அலுவலகத்தில் விஜய் கட்சி கொடியை ஏற்றி அறிமுகம் செய்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் தனது முதல் அரசியல் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்த தலைவர் விஜய் திட்டமிட்டு இருந்தார்.
இந்த மாநாட்டிற்கு அனுமதி கேட்டு கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விழுப்புரம் காவல்துறையிடம் மனு அளித்திருந்தார்.
அதனை அடுத்து, காவல்துறை தரப்பில் 21 கேள்விகளை எழுப்பி, பதில் அளிக்க நோட்டீஸ் வழங்கியிருந்தார்கள். பின் அந்த கேள்விகளுக்கான பதில் அடங்கிய மனுவை பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் காவல்துறையிடம் வழங்கி இருந்தார்கள்.
பின் அந்த கேள்விகளுக்கான பதில் அடங்கிய மனுவை பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் காவல்துறையிடம் வழங்கி இருந்தார்கள். தற்போது, 33 நிபந்தனைகளுடன் மாநாட்டை நடத்த காவல்துறையினர் அனுமதி வழங்கி இருக்கிறார்கள்.
மேலும் படிக்க: சென்னையில் ரயிலை கவிழ்க்க மர்மநபர்கள் சதியா? பொன்னேரி ரயில் நிலையம் அருகே அதிர்ச்சி!
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், அக்கட்சியின் முதல் மாநாடு குறித்து அதிகாரப்பூர்வமாக தற்போது அறிவித்திருக்கிறார்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, வருகின்ற அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி (27.10.2024) மாலை நாலு மணி அளவில் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள வி. சாலை கிராமத்தில் நடைபெற உள்ளது என்பதை பெரும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்வதாக விஜய் அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து கோவையில் டாபிக் சார்பில் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகிறது. அந்த போஸ்டர்களின் விதியை மாற்றுவோம் விக்கிரவாண்டியில் என குறிப்பிடப்பட்டுள்ளது.
0
0