பாஜகவின் சதிகளை முறியடிக்க ஒன்றாக திரள்வோம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்!!
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் வருகிற 18-ந்தேதி தொடங்கி 22-ந்தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து பகிர்ந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாஜகவின் திசை திருப்பும் தந்திரங்களுக்கு சளைக்காமல் பிரச்சனைகளுக்கு முன்னுரிமை கொடுங்கள் என்று தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் (எக்ஸ்) பதிவில், “செப்டம்பர் 18-ம் தேதி முதல் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நெருங்கி வரும் நிலையில், நாம் ஒன்றிணைந்து மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டிய நேரம் இது.
நம்முடைய நோக்கம் தெளிவாக உள்ளது: பாஜகவின் திசை திருப்பும் தந்திரங்களுக்கு சளைக்காதீர்கள். வலுவாக நில்லுங்கள், குரல் எழுப்புங்கள், மணிப்பூர் வன்முறை மற்றும் சிஏஜி அறிக்கையில் கூறப்பட்ட முறைகேடுகள் போன்ற முக்கியமான பிரச்சனைகளுக்கு முன்னுரிமை கொடுங்கள்.
நாம் ஒன்று சேர்ந்து, பாஜகவின் சதிகளை முறியடித்து, நமது மாபெரும் குடியரசின் நீதியை உறுதி செய்ய முடியும்” என்று தெரிவித்து உள்ளார்.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.