மோடி வாடகை வீட்டை தேடுகிறாரா அல்லது திமுகவினர் வேறு வீட்டுக்கு போவார்களா என பார்க்கலாம் : ஏசி சண்முகம்!!

Author: Udayachandran RadhaKrishnan
10 March 2024, 1:57 pm

மோடி வாடகை வீட்டை தேடுகிறாரா அல்லது திமுகவினர் வேறு வீட்டுக்கு போவார்களா என பார்க்கலாம் : ஏசி சண்முகம்!!

வேலூர் மாவட்டம் வேலூரில் உள்ள டான்போஸ்கோ உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் ஏ.சி.எஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் புதிய நீதி கட்சி சார்பில் இலவச வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது

இதில் மொத்தம் 130 நிறுவனங்கள் பங்கேற்று 2858 நபர்கள் பதிவு செய்தனர் இதில் 1689 பேர் தேர்வு செய்யப்பட்டு அதில் 546 பேருக்கு உடனடியாக பணி நியமன ஆணையை புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி சண்முகம் வழங்கினார்

பின்னர் புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி சண்முகம் செய்தியாளர்களிடம் கூறுகையில்

ஆந்திரா அரசு பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு ஆந்திரா அரசு கட்டக் கூடியது மிகப்பெரிய அணை அந்த அணையை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் காவேரி பிரச்சனை எம்ஜிஆர் காலத்திலேயே வந்தது அப்போதைய முதல்வர் குண்டூ ராவ் எம்ஜிஆர் தொலைபேசியில் பேசி அவரது வீட்டிற்குச் சென்று எனக்கு சாப்பாடு வேண்டாம் என் மக்களுக்கு தண்ணீர் வேண்டும் என்று எம்ஜிஆர் கூறியவுடன் உடனே தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்து விட்டனர் ஆந்திர முதலமைச்சரை தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்தித்தால் இதற்கு ஒரு விடிவு காலம் பிறக்கும் நட்புறவோடு அருகே இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் ஆனால் அதை செய்ய இந்த அரசு தவறுகிறது

மோடி வாடகை வீடு எடுத்து தங்கினால் கூட தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது என எம்.பி.கனிமொழி கூறியுள்ளது குறித்து கேட்டதற்கு, பிரதமர் மோடி வாடகை வீடு தேடுகிறாரா இவர்கள் வேறு ஏதாவது வீட்டை தேடுகிறார்களா என்பது தேர்தல் முடிந்தவுடன் தெரிந்து விடும் மோடி அவர்களுக்கு குடும்பம் இல்லை என்பது குற்றச்சாட்டாக வைக்கின்றனர்.

குடும்பம் இல்லாத ஒருவர்தான் நாட்டை நல்வழிப்படுத்த முடியும் குடும்பம் இருந்தால் பிள்ளைகளுக்கு சேர்த்து வைக்க வேண்டும் மற்றும் கோடிக்கணக்கில் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும் குடும்பம் இல்லாத ஒரு மனிதன் இந்தியாவின் தலைவராக இருப்பது பெருமை தான் அப்போதுதான் நேர்மையான ஆட்சி நடத்த முடியும் இந்தியாவை வல்லரசு நாடாக மாற்ற முடியும் 13 வது இடத்த்தில் இருந்த பொருளாதாரத்தை 5 வது இடத்திற்கு கொண்டு வந்திருக்கிறார் தேர்தல் முடிந்தவுடன் மூன்றாவது இடத்திற்கு வரும் இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி இந்தியா முன்னிலையில் வரும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார் தமிழகத்தில் 22 தொகுதிகளுக்கு மேல் பிஜேபிக்கா மற்ற கட்சியினருக்கு போட்டி என்பதுதான் தமிழ்நாட்டில் காலூன்ற வேண்டும் என்பதற்காகதான்

பாஜகவிற்கும் புதிய நீதி கட்சிக்கும் கூட்டணியில் இணைய இருக்கும் கட்சிகளோடு சேர்ந்து மக்களோடு தான் நாங்கள் கூட்டணி வைத்துள்ளோம் இந்த கூட்டணிக்கு பிறகு என்ன நடக்கப் போகிறது என்பதை தேர்தலுக்கு பிறகு பார்ப்பீர்கள் திமுகவை மதிமுகவும் 30 ஆண்டு காலம் மாறி மாறி வந்து கொண்டிருக்கிறது தமிழகத்தில் மாற்று சக்தியாக தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய சக்தியாக மாறி உள்ளது

பாஜக அதிமுகவுடன் கூட்டணி அமைக்குமா? அல்லது அமமுக ஓபிஎஸ் உடன் கூட்டணி அமைக்குமா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அதைப்பற்றி இன்னும் இரண்டு மூன்று நாட்களுக்குள் நீங்களே தெரிந்து கொள்வீர்கள் என கூறினார்

இந்தியா கூட்டணியில் கமலஹாசனுக்கு ராஜ்யசபா சீட் வழங்கி நல்லது தான் கமலஹாசன் எனக்கு நெருங்கிய நண்பர் அவருக்கு ராஜ்ய சபா சீட் கொடுத்திருப்பதை அவருக்கு பாராட்டு மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 384

    0

    0