தொப்பி இருக்காலம்.. தொப்பை இருக்கக் கூடாது ; போலீசாரின் பதவி உயர்வு விழாவில் ஆளுநர் தமிழிசை கலகல!!

Author: Babu Lakshmanan
12 March 2024, 12:02 pm

போலீசாரிடம் தொப்பி இருக்கலாம். தொப்பை இருக்கக்கூடாது என்றும், போலீசார் ஃபிட்டாக இருக்க வேண்டும் என புதுச்சேரி காவலர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் விழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை பேசினார்.

புதுச்சேரி காவல்துறையில் 10,15,25 ஆண்டுகள் பணி முடித்த காவலர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் நிகழ்ச்சி தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் 10 ஆண்டு பணிபுரிந்தவர்களுக்கு தலைமை காவலர் பதவியும், 15 ஆண்டுகள் பணிப்புரிந்தவர்களுக்கு துணை உதவி ஆய்வளர் பதவியும், 25 ஆண்டுகள் பணிப்புரிந்தவர்களுக்கு உதவி ஆய்வாளர்களாகவும் என சுமார் 2000-க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு பதவி உயர்வை வழங்கினர்.

விழாவில் பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன், சமுதாயத்தை கண்டித்து வளர்ப்பதை விட கண்காணித்து வளர்க்க வேண்டும் என்றும், அது காவல்துறை அலுவலகத்துக்கும் பொருந்தும், காவல் நிலையத்துக்கும் பொருந்தும், என்றார்.

மேலும், போலீசாரிடம் தொப்பி இருக்கலாம், தொப்பை இருக்கக்கூடாது என்றும், தொப்பை அதிகரிக்க அதிகரிக்க வாழ்நாள் குறையும். எனவே, போலீசார் ஃபிட்டாக இருக்க வேண்டும், என பேசினார்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 1171

    0

    0