சிறையில் இருந்து தப்பியோடிய ஆயுள் கைதி.. 25 நாட்களாக வலை வீசிய போலீசார் : புதுக்கோட்டையில் சிக்கிய துப்பு!!!

Author: Udayachandran RadhaKrishnan
22 December 2023, 10:50 am

சிறையில் இருந்து தப்பியோடிய ஆயுள் கைதி.. 25 நாட்களாக வலை வீசிய போலீசார் : புதுக்கோட்டையில் சிக்கிய துப்பு!!!

தேனி மாவட்டம் அல்லிநகரம் சுக்குவடன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். 47 வயதான இவர் ஆயுள் தண்டனை சிறைவாசியாக கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 24ம் தேதி முதல் மதுரை மத்திய சிறைச்சாலையில் உள்ள நிலையில் சிறை வளாகத்தில் வேலை செய்து கொண்டிருந்த நிலையில் மாலை வேளையில் இவர் தப்பி சென்றது தெரிய வந்ததை தொடர்ந்து சிறைத்துறை அதிகாரிகள் தொடர்ந்து தேடி வந்தனர்.

சிறைத்துறை சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டு மதுரை தேனி கம்பம் போடி உள்ளிட்ட பகுதிகளில் தேடுதல் வேட்டைகள் நடைபெற்று வந்த நிலையில், இன்று காலை மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியில் ஜெயக்குமார் இருப்பதை தெரியவந்ததை தொடர்ந்து மத்திய சிறை கண்காணிப்பாளர் சதீஷ்குமார் மற்றும் தனிப்பட்ட மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அருகே கண்டுபிடிக்கப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையில் இருந்து தப்பி ஓடிய ஆயுள் தண்டனை சிறைவாசியை 25 நாட்களாக தேடப்பட்டு வந்த நிலையில் இன்று காலை தப்பியோடிய சிறைவாசியை கைது செய்த காவலர்கள் ராமகிருஷ்ணன் மற்றும் சேதுராமன் உட்பட தனிப்படையினரை மதுரை சரக டிஐஜி திரு பழனி மற்றும் கண்காணிப்பாளர் சதீஷ்குமார் ஆகியோர் பாராட்டினர்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!