ஆயுள் கைதிக்கு சிறையில் சித்ரவதை.. வேலூர் மத்திய சிறையில் சிபிசிஐடி அதிரடி ரெய்டு..!!

Author: Udayachandran RadhaKrishnan
11 September 2024, 6:19 pm

கிருஷ்ணகிரியை சேர்ந்த சிவகுமார் என்பவர் வேலூர் மத்திய சிறையில் ஆயுள் கைதியாக இருந்தார். இவரது தாய் கலாவதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

இதில் ஆயுள் கைதியான தனது மகனை சட்டவிரோதமாக வேலூர் சிறைத்துறை டிஐஜி வீட்டு வேலைக்கு பணி அமைத்ததாகும். அங்கு நகை பணம் காணாமல் போன நிலையில் தனது மகன் எடுத்ததாக கூறி தனியாக சிறையில் வைத்து சித்திரவதை செய்ததாக புகார் அளித்திருந்தார்

இதனை அடுத்து இந்த புகார் குறித்து வேலூர் சிறைத்துறை நீதித்துறை நடுவர் உத்தரவிட்டிருந்தது நீதித்துறை நடுவர் அளித்த அறிக்கை அடிப்படையில் சிபிசிஐடி எஸ் பி வினோத் சாந்தாரா தலைமையிலான போலீசார் சிறை அதிகாரிகள் அத்துமீறல் குறித்து விரிவான விசாரணை மேற்கொண்டனர்.

முன்னதாக பாதுகாப்பு அடிப்படையில் சிவகுமார் சேலம் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டார். அவரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரித்தனர் தனக்கு நேர்ந்த கொடுமையை சிவக்குமார் விரிவான வாக்குமூலம் அளித்ததின் அடிப்படையில்
வேலூர் சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி, வேலூர் கூடுதல் எஸ் பி அப்துல் ரகுமான், ஜெய்லர் அருள்குமரன் உட்பட 14 பேர் மீது ஐந்து பிரிவினில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஐந்து மாதத்திற்கு மேலாக சிவகுமாருக்கு இந்த கொடுமை நடந்துள்ளது என்பது முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி வீட்டில் ஆயுள் கைதி சிவகுமார் பணி அமைக்கப்பட்ட நிலையில் ஐந்து லட்சம் மதிப்பிலான பணம் மற்றும் நகை திருடு போனதாகவும் அதனை சிவகுமார் திருடி இருக்கலாம் என்று சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி கூறியதன் அடிப்படையில் சிறைத்துறை கூடுதல் எஸ் பி ஜெயிலர் மற்றும் சிறை துறையினர் கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

வேலூர் மத்திய சிறையிலும் டிஐஜி பங்களாவிலும் ஆய்வு செய்ததன் அடிப்படையில் திருட்டு சம்பவம் நடந்தது தொடர்பாகவும் அது சம்பந்தமாக அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது தெரியவந்தது .

ஆயுள் கைதி சிவகுமார் 84 நாட்கள் தனிமை சிறையில் அடைக்கப்பட்டதும் 14 நாட்கள் மூடப்பட்ட இருட்டு அறையில் மிகக் கொடுமையாக தாக்கப்பட்டதும் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் வேலூர் மத்திய சிறையில் சிபிசிஐடி போலீசார் இன்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Mersal Film is Flop or hit Says Producer Hema Rukmani மெர்சல் படம் தோல்வியா? தயாரிப்பாளர் கொடுத்த ஷாக் பதில் : வெளியான வீடியோ!