தோனி போல அண்ணாமலை… அரசியலில் சிக்சர்களாக விளாசுகிறார் ; பாஜக கூட்டத்தில் நடிகை ராதிகா புகழாரம்…!!!

Author: Udayachandran RadhaKrishnan
31 March 2024, 8:02 pm

தோனி போல அண்ணாமலை… அரசியலில் சிக்சர்களாக விளாசுகிறார் ; பாஜக கூட்டத்தில் நடிகை ராதிகா புகழாரம்…!!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கலில் பாஜக கூட்டணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விருதுநகர் பாஜக வேட்பாளர் ராதிகா மற்றும் சரத்குமார் பங்கேற்றனர்.

பின்னர் கூட்டத்தில் பேசிய ராதிகா, இந்தியா முழுவதும் எங்கு சென்றாலும் மோடி ஜி.. மோடி ஜி.. கோஷம்தான் ஒலிக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் கடிவாளம் போட்ட மாதிரி மாறுபட்டு இருக்கிறது.

பா.ஜ.க.வினர் அனைவரும் மதவாதிகள்; சிறப்பாக செயல்பட மாட்டார்கள், தமிழ்நாட்டிற்கு எதுவும் செய்யவில்லை என கூறுகின்றனர். தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெளிவாக இருக்கிறார்.

அண்ணாமலை அரசியல் களத்தி தோனி போல் சிக்சர்கள் அடிக்கிறார். இந்த மாதிரி சிக்சர்களை அரசியல் களத்தில் பார்த்ததில்லை. தமிழகத்தில் பா.ஜ.க.வின் மீது பயம் வந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி