மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து கள்ளச்சந்தையில் விற்பனை : பெண் கைது… ஏராளமான பாட்டில்கள் பறிமுதல்..!!

Author: Babu Lakshmanan
23 September 2022, 5:58 pm

கொடுங்கையூர் பகுதியில் வீட்டில் மதுபாட்டில்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

சென்னையில் போதை பொருட்கள் வைத்திருப்பவர்கள் மற்றும் அதனை பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்களையும் தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக சென்னை கொடுங்கையூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கொடுங்கையூர், எழில் நகர், 4வது தெருவில் உள்ள ஓரு வீட்டை கண்காணித்தபோது, அங்கு மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவது தெரியவந்தது.

அதன் பேரில் மேற்படி வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த ரோசி, (வயது 52) அவரிடமிருந்து 180 மி.லி.அளவு கொண்ட 30 மதுபாட்டில்கள் மற்றும் ரொக்கம் ரூ.1.000/- பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணைக்குப் பின்னர் ரோசி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

  • Ajith reunite Again With Adhik அஜித்துடன் மீண்டும் கூட்டணி… உருவாகும் மார்க் ஆண்டனி 2.. ஆதிக் முடிவு!!
  • Views: - 392

    0

    0