ஒரு பாட்டிலுக்கு ரூ.10… ரெண்டு பாட்டிலுக்கு ரூ.20-ஆ…? கூடுதல் விலைக்கு மதுவிற்பனை.. டாஸ்மாக்கில் வாக்குவாதம்..!

Author: Babu Lakshmanan
24 August 2023, 3:58 pm

சேலம் ; ஆத்தூர் அருகே டாஸ்மாக் மதுபான கடையில் ௯டுதல் விலைக்கு 10 ரூபாய் வாங்கியதாக மதுப்பிரியரியர்களுக்கும் ஊழியருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் இரயிலடி தெருவில் அரசு டாஸ்மாக் மதுபான கடை செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அரசு டாஸ்மாக் மதுபான கடையில் ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வாங்குவதாக மிகப்பெரிய அளவில் சரச்சை ஏற்பட்டு, அது பரபரப்பாகி வந்தது.

அது தற்போது சற்று ஓய்ந்த நிலையில், சேலம் மாவட்டம் ஆத்தூர் இரயிலடி தெருவில் உள்ள டாஸ்மாக் கடையில் பணியாற்றிய ஊழியர் மதுப்பிரியர்களிடம் MRPவிலையை விட ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாகவும், மதுபிரியர் வாங்கிய மதுபாட்டில் இரண்டிற்கும் 30 கூடுதலாக பணம் வாங்கியுள்ளார். இதனால் எதற்காக ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய், மற்றொரு பாட்டிலுக்கு 20 ரூபாய் என 30 ரூபாய், MRP விலையை விட கூடுதலாக வாங்குகிறீர்கள் என கேட்டுள்ளார்.

அப்போது அங்கு பணியிலிருந்த ஊழியர் மற்றும் மதுப்பிரியருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பணியில் இருந்த ஊழியர், மதுப்பிரியர் பேசுவதை தனது மொபைல் போனில் படம் எடுத்ததால், ஊழியிருக்கும் மது பிரியருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் முப்பது ரூபாய் கூடுதலாக எதற்கு எடுத்தீர்கள் என கேட்ட மது பிரியரிடம், மது பாட்டில்களை வாங்கிக் கொண்டு மது பிரியர் கொடுத்த 500 ரூபாயை திருப்பிக் கொடுத்துவிட்டு, மது பாட்டில் உங்களுக்கு வழங்க முடியாது, எனவும் தெரிவித்துள்ளார்.இதனால், ஆத்திரமடைந்த மது பிரியர் மற்றும் மது வாங்க நின்றிருந்தவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

https://player.vimeo.com/video/857444173?badge=0&autopause=0&player_id=0&app_id=58479

மேலும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி சர்ச்சை ஏற்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…