பேருந்து நிலையம் கிளாம்பாக்கம் மாறியதால் வாழ்வாதாரமே போச்சு.. அமைச்சர் காலில் விழுந்து அழுத பெண்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
30 January 2024, 7:41 pm
Sivasankar
Quick Share

பேருந்து நிலையம் கிளாம்பாக்கம் மாறியதால் வாழ்வாதாரமே போச்சு.. அமைச்சர் காலில் விழுந்த அழுத பெண்கள்!!

செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் பகுதியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு பேருந்து நிலையத்தில், இன்று முதல் செங்கல்பட்டு மற்றும் திண்டிவனம் வழியாக செல்லக்கூடிய தென் மாவட்ட பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கத்தில் இருந்து சென்று வருகிறது.

இந்தநிலையில் போக்குவரத்து துறை அமைச்சர், சிவசங்கர் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்பொழுது சில பெண்கள் திடீர் அமைச்சர் காலில் விழுந்து, கோரிக்கை வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அழுது கொண்டே எங்கள் வாழ்வாதாரத்தை நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும் என அந்த பெண்கள் தெரிவித்தனர்.

இதனை அடுத்து பெண்கள் செய்தியாளரை சந்தித்த பொழுது தெரிவித்ததாவது : நாங்கள் பெருங்களத்தூர் பகுதியில், கடை வைத்து வியாபாரம் பார்த்து வருகிறோம். சுமார் 200க்கும் மேற்பட்டோர் இங்கு கடை வைத்து அங்கு வரும் பயணிகளை நம்பி தான் எங்கள் வாழ்வாதாரம் உள்ளது.

இப்பொழுது பேருந்துகள் கிளாம்பாக்கம் வரை மட்டும்தான் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், நாங்கள் செய்வது அறியாமல் தவித்துள்ளோம். நாங்கள் இந்த இடத்தில் கடை கேட்ட பொழுது, எங்களுக்கு கடை ஒதுக்க மறுத்துவிட்டார்கள் என வேதனையுடன் தெரிவித்தனர்.

  • Vijay கமலுக்கு No.. சீமானுக்கு Yes.. விட்டுக் கொடுக்காத விஜய்
  • Views: - 462

    1

    0