மஞ்சுவிரட்டில் பறிபோன உயிர்கள்.. காளை முட்டி 13 வயது சிறுவன் உட்பட 2 பேர் உயிரிழந்த பரிதாபம்!!

Author: Udayachandran RadhaKrishnan
17 January 2024, 2:33 pm

மஞ்சுவிரட்டில் பறிபோன உயிர்கள்.. காளை முட்டி 13 வயது சிறுவன் உட்பட 2 பேர் உயிரிழந்த பரிதாபம்!!

தமிழர் திருநாளாம் தை பொங்கள் திருநாளை முன்னிட்டு தமிழர்களின் பாராம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டு கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

இன்று உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டம் சிறாவயல் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போன்ற மஞ்சுவிரட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் 271 காளைகள் பங்கேற்றன. 81 மாடுபிடி வீரர்கள் இந்த விளையாட்டில் பங்கேற்றனர். சுமார் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போட்டியின் போது, அங்கு பார்வையாளராக வந்திருந்த வலையப்பட்டியை சேர்ந்த 13 வயது சிறுவன் பாஸ்கரை மஞ்சுவிரட்டு காளை ஒன்று மோதியதில் சம்பவ இடத்திலேயே சிறுவன் உயிரிழந்தான்.

அதே போல மஞ்சுவிரட்டு காளை அவிழ்த்துவிடப்பட்டு அது குறிப்பிட்ட தூரத்தை கடந்து, மாட்டின் உரிமையாளர்கள் அதனை பிடிக்க முற்படும் போது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. அதே போல அடையாளர் தெரியாத இளைஞர் ஒருவர் மாடு முட்டி பரிதாபமாக உயிரிழந்தார். 2 பேர் உயிரிழந்ததால் ஜல்லிக்கட்டு போட்டியில் பரபரப்பு நிலவியது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி