மிக்ஜாம் புயலுக்கு பறிபோன உயிர்கள்… தலைநகரை சோகத்தில் ஆழ்த்திய மரணம்!!

Author: Udayachandran RadhaKrishnan
4 December 2023, 7:34 pm

மிக்ஜாம் புயலுக்கு பறிபோன உயிர்கள்… தலைநகரை சோகத்தில் ஆழ்த்திய மரணம்!!

தென்மேற்கு வங்ககடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தற்போது புயலாக வலுவடைந்தது. இந்த புயலுக்கு ‘மிக்ஜாம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து 100 கி.மீ தொலைவில் வடகிழக்கில் ‘மிக்ஜாம்’ புயல் மையம் கொண்டுள்ளது.

‘மிக்ஜாம்’ புயல் மணிக்கு 8 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில் தற்போது 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இதனால், ஆந்திராவில் நாளை முற்பகல் பாப்டலா என்ற இடத்தில் புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் இருந்து 100 கி.மீ தொலைவில் ‘மிக்ஜாம்’ புயல் மையம் கொண்டுள்ளதால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை விடாமல் பெய்து வருகிறது.

இந்நிலையில், ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக இதுவரை 4 பேர் உயிரிழந்ததாகவும் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் மழை தொடர்பான விபத்தில் 17 கால்நடைகள் உயிரிழந்துள்ளது.

அதில் எருமை மற்றும் பசு மாடுகள் 6 உயிரிழந்ததாகவும், 11 ஆடுகள் உயிரிழந்துள்ளது என தமிழக பேரிடர் மேலாண்மை துறை தகவல் தெரிவித்துள்ளது. குடிசை மற்றும் வீடுகள் என 63 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளது. மேலும் 5 குடிசைகள் முழுமையாக சேதம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!