திருநங்கையை திருமணம் செய்வதாக கூறி 2 வருடமாக LIVING TOGETHER : எஸ்கேப் ஆன இளைஞர்.. தாலியுடன் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
2 September 2022, 6:42 pm

திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி 2 வருடமாக லிவிங்-டூ கெதர் வாழ்க்கை திருமணம் செய்ய வலியுறுத்தியபோது எஸ்கேப் ஆன கணவர் வீட்டின் தர்ணாவில் ஈடுபட்ட திருநங்கையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கீழச்சின்னனம்பட்டி பகுதியை சேர்ந்தவர் திருநங்கை ஸ்ரீநிதி, இவரும் சோழவந்தான் அருகே உள்ள முள்ளிபள்ளம் பகுதியை சேர்ந்த தங்கதுரை (எ) விவேக் என்ற வாலிபரும் ஒன்றாக கோவில் ஒன்றை நடத்தி வந்துள்ளனர். இதில் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது.

இருவரும் இரண்டு வருடமாக லிவிங்-டூ- கெதர் முறையில் ஒன்றாக ஒரே வீட்டில் கணவன் மனைவி போல் வசித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன் திடீரென தங்கதுரை தலைமறைவானதாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த திருநங்கை ஸ்ரீநிதி தங்கதுரை வீட்டுக்கு சென்று விசாரித்தபோது தங்கதுரைக்கும் மற்றொரு பெண்னுக்கும் அண்மையில் திருமணம் நடைபெற்று அப்பெண்ணுடன் வாழ்ந்து வருவது திருநங்கை ஸ்ரீநிதிக்கு தெரியவந்தது.

இதனையடுத்து செய்வதறியாது தவித்த திருநங்கை மதுரை எஸ்.பி.சிவபிரசாத்திடம் கணவரை சேர்த்து வைக்குமாறு புகார் அளித்துள்ளார். எஸ்.பி.பாலமேடு காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகாரை விசாரணை செய்ய உத்தரவிட்டார்.

போலீசார் உரிய விசாரணை நடத்தாததால், கணவரை மீட்டு தருமாறு வாலிபர் தங்கதுரை வீட்டின் முன் தாலி கயிறுடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

உடனடியாக சம்பவம் அறிந்த சோழவந்தான் போலீசார் திருநங்கை ஸ்ரீநிதியை அழைத்து இரு நாட்களில் வாலிபரை காவல் நிலையத்தில் அழைத்து வந்து விசாரணை நடத்தி சேர்த்து வைப்பதாக ஆறுதல் கூறியதால் திருநங்கை அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

  • Dragon Movie Release in OTT Date Announced வசூலில் மிரட்டிய டிராகன் ஓடிடியில் ரிலீஸ்… தேதி அறிவிப்பு!