காலை சிற்றுண்டியில் பல்லி.. 10 குழந்தைகள் மயக்கம்.. வீடியோ எடுக்க சென்ற செய்தியாளர்களை தள்ளிவிட்டு கதவை மூடிய அரசு மருத்துவர்!

Author: Udayachandran RadhaKrishnan
10 January 2024, 5:49 pm

காலை சிற்றுண்டியில் பல்லி.. 10 குழந்தைகள் மயக்கம்.. வீடியோ எடுக்க சென்ற செய்தியாளர்களை தள்ளிவிட்டு கதவை மூடிய அரசு மருத்துவர்!

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அருகே அவிரியூர் ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளியில், பல்லி விழுந்த காலை உணவுத் திட்ட சிற்றுண்டி சாப்பிட்ட மாணவ, மாணவிகள் 10 பேர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து, செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களை, செய்தி சேகரிக்க விடாமல் தடுத்து, சிகிச்சை பிரிவில் இருந்து வெளியே தள்ளி, கதவை மூடி மருத்துவர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், பாதுகாவலரை வரச்சொல்லி செய்தியாளர்களை வெளியே அனுப்புமாறும் கூறினார்.

இந்த நிலையில், மருத்துவரிடம் செய்தியாளர்கள் முறையிட்டபோது, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வரிடம் அனுமதி கடிதம் பெற்று வந்ததால் மட்டுமே, செய்தி சேகரிக்க அனுமதிக்க முடியும் என்றும் கூறினார்.

மாணவர்களின் நலன்கருதி, செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்ளை வெளியே தள்ளி, கதவை மூடிய மருத்துவரின் செயல் திமுக அரசிற்கு ஆதரவாக தெரிவதாகவும், காலை உணவுத் திட்டத்தில் ஏற்பட்ட இச்செயலை மூடி மறைக்கவே மருத்துவர்கள் இதுபோன்று செய்ல்படுவதாகவும் குற்றசாட்டு எழுந்துள்ளது.

  • Pa Ranjith Isai vaniஐயப்பனை இழிவுப்படுத்திய பா. ரஞ்சித், இசைவாணி : வெளியான வீடியோ.. வலுக்கும் எதிர்ப்பு!
  • Views: - 422

    0

    0