அரசு நிறுவனத்தில் ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை: சுமைப்பணி தொழிலாளர்கள் ஆட்சியரிடம் புகார்!!

Author: Rajesh
21 March 2022, 12:29 pm

கோவை: மத்திய அரசின் ஸ்டீல் பிளான்ட் நிறுவனத்தின் கிடங்கில் பணியாற்றிவரும் பாரம் தூக்கும் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு, இ.எஸ் ஐ உள்ளிட்ட எந்த வசதிகளும் செய்து தரப்படவில்லை என்று கூறி கோவை மாவட்ட சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.

இதுகுறித்து அவர்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனம் விசாகப்பட்டினம் ஸ்டீல் பிளான்ட் நிறுவனத்தின் கிடங்கு பீளமேட்டில் கடந்த 35 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

இங்கு தற்போது, இருந்த 25 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறோம். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை செய்து ஓய்வு பெற்றவர்களுக்கும், நிறுவனத்தில் நடந்த விபத்தின் காரணமாக வேலை செய்ய முடியாதவர்களுக்கும் எவ்விதமாக இழப்பீடும் வழங்க வில்லை.

மேலும் 30 ஆண்டுகள் வேலை செய்த பின்பும் முறையான ஊதிய விகிதமும், ஊதிய உயர்வும் அமலாக்கப்படவில்லை. இ.எஸ்.ஐ., பி.எஃப் அமல்படுத்தவில்லை. கழிவறை, ஓய்வறை குடிநீர், சீருடை என்ற எந்த வசதிகளும் இல்லை. கொத்தடிமைகள் போல் கடந்த 30 ஆண்டுகளாக உழைப்பைச் சுரண்டி வருகிறார்கள் எனவே இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 1396

    0

    0