நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விறுவிறு… போஸ்டர்கள், பெயிண்ட் விளம்பரங்களை அழிக்கும் பணி தீவிரம்..!!

Author: Babu Lakshmanan
29 January 2022, 1:13 pm

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போஸ்டர்கள் மற்றும் பெயிண்ட் விளம்பரங்களை அழிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் நகரமைப்பு உள்ளாட்சி தேர்தல் துவங்கிய நிலையில் வெள்ளிக்கிழமையான நேற்று முதல் வேட்பு மனுக்கள் பெறப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் உள்ள 8 பேரூராட்சிகள், 3 நகராட்சிகள், ஒரு மாநகராட்சி என்று தேர்தல்கள் நடைபெற உள்ளது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் அரசியல் கட்சி போஸ்டர்கள் அதிக அளவில் ஒட்டப்பட்டிருந்தன.

மாநகராட்சி நிர்வாகம் சார்பில், போஸ்டர்கள் அழிக்கும் பணி துவங்கிய நிலையில், மாலை மற்றும் இரவு மட்டும் இல்லாமல் நள்ளிரவிலும் போஸ்டர்கள் அழிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட, ஜவஹர் பஜார், கரூர் பேருந்து நிலையம், மினி பேருந்து நிலையம், ஈஸ்வரன் கோயில் பின்புறம், பசுபதிபுரம், பிரதட்சிணம் ரோடு, பழைய பேருந்து நிலையம், லைட் ஹவுஸ் கார்னர், சர்ச் கார்னர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நள்ளிரவிலும் போஸ்டர்கள் அளித்து அதனை சுவற்றில் இருந்து அகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கென்று மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்

  • srikanth tells about the incident when he was watching dragon movie டிராகன் படத்துக்கு போனேன், கடுப்பேத்திட்டாங்க- ஆதங்கத்தை கொட்டிய நடிகர் ஸ்ரீகாந்த்…