அதிமுக வேட்பாளர் மரணம் : தேர்தல் ஒத்திவைப்பு!!

Author: kavin kumar
12 February 2022, 7:53 pm

மயிலாடுதுறை : மயிலாடுதுறை நகராட்சியில் 19- வது வார்டு உறுப்பினர் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் மொத்தம் 211 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த தொகுதியில் 19-வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அன்னதாட்சி(வயது 64) தேர்தல் பிரச்சார பணிகளில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் நேற்று மாலை கோவில் விழா ஒன்றில் பங்கேற்ற அவர், உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி இழுந்தார்.

இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று இரவு அன்னதாட்சி உயிரிழந்தார். இந்த நிலையில், மயிலாடுதுறை 19-வது வார்டில் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக நகராட்சி ஆணையரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான பாலு அறிவித்துள்ளார். முன்னதாக அதிமுக வேட்பாளர் ஜானகிராமன் மரணம் காரணமாக காஞ்சிபுரம் 36-வது வார்டில் நகர்ப்புற தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடதக்கது.

  • vaadivaasal movie shooting starts on august ஒரு வழியாக தொடங்கப்போகுது வாடிவாசல்? ஒரு படத்துக்கு இவ்வளவு இழுபறியா?