என்னை பகைத்தவர்களும் வாழ்க.. பழித்தவர்களும் வாழ்க : வைரமுத்து கொடுத்த மறைமுக பதிலடி!

Author: Udayachandran RadhaKrishnan
15 May 2024, 1:25 pm

என்னை பகைத்தவர்களும் வாழ்க.. பழித்தவர்களும் வாழ்க : வைரமுத்து கொடுத்த மறைமுக பதிலடி!

தமிழ் சினிமாவின் முக்கிய பாடலாசிரியராக விளங்குபவர் வைரமுத்து. நிழல்கள் படம் மூலம் தமிழ் திரையலகுக்கு அறிமுகமான அவர் பல பாடல்களை எழுதியுள்ளார்.

தமிழை பட்டை தீட்டி வென்றவர் என்றே சொல்லலாம். பல சர்ச்சைகள் வந்த விழுந்தாலும், பதிலடி கொடுத்து வரும் வைரமுத்து தனது பாடலுக்காக இதுவரை 7 முறை தேசிய விருதை வென்று சாதனை படைத்துள்ளார்.

மேலும் படிக்க: நியாயமான உணர்வுக்கும்‌ மதிப்பளியுங்க… உரிமையில் பேசுவது ரொம்ப காயப்படுத்துது ; ஜிவி பிரகாஷ் உருக்கம்..!!

வைரமுத்துவை சுற்றி பல சர்ச்சைகள் இருந்தாலும், தனது கருத்துக்களில் இருந்து பின்வாங்கியது கிடையாது. இந்த நிலையில் தற்போது இவர் தனது x தளத்தில் சொன்ன கருத்து வைரலாகி வருகிறது.

அதில் அவர் கூறியுள்ளதாவது, ‘பழித்தாரும் வாழ்க, என்னைப் பகைத்தாரும் வாழ்க. மன்றில் இழித்தாரும் வாழ்க, வாழ்வில் இல்லாத பொய்மை கூட்டிச் சுழித்தாரும் வாழ்க. என்னைச் சுற்றிய வெற்றி வாய்ப்பைக் கழித்தாரும் வாழ்க. நானோ காலம்போல் கடந்து செல்வேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

  • Kayadu Lohar Visit Kalahasti Temple Crowd Gathered பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!