சத்தியமங்கலம் புலிகள் சரணாலய சாலையில் போக்குவரத்துக்கு அனுமதி: நீண்ட வரிசையில் காத்திருக்கும் லாரிகள்..!!
Author: Rajesh11 February 2022, 9:31 am
சென்னை: சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தின் வழியாக செல்லும் கோவை – மைசூர் சாலையில் காலை 6 மணி முதல் வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் லாரிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து செல்கின்றன.
தமிழகம் – கர்நாடகத்தை இணைக்கும் முக்கிய வழித்தடம் திம்பம் மலைப்பாதை சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில், தமிழகம் – கர்நாடகத்தை இணைக்கும் திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்தை தடை செய்ய சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
பொதுப்பணித்துறை மற்றும் வனத்துறை பொதுமக்களின் கருத்துக்களை கேட்ட பிறகு அறிக்கை தாக்கல் செய்ய , சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த விவகாரத்தில் இரவு நேர போக்குவரத்திற்கு தடை விதிக்கப்படுவதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் .
மேலும், திம்பம் மலைப்பகுதியில் பொதுமக்கள் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் வனவிலங்குகளின் பாதுகாப்பு காரணமாக மாலை 6 மணி முதல் அதிகாலை 6 மணி வரை திம்பம் மலைப்பகுதி யை மூட சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதன் காரணமாக திம்பம் மலைப்பகுதியில் செல்லும் அனைத்து வாகனங்களும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன .
இந்நிலையில் சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தின் வழியாக செல்லும் கோவை – மைசூர் சாலையில், காலை 6 மணி முதல் வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திம்பம் மலைப்பாதையில் வாகன போக்குவரத்துக்கு கட்டுப்பாடு நேற்று இரவு அமலான நிலையில், இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு நேர வாகன போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட தடையால் ஆயிரக்கணக்கான லாரிகள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றது.