விஜய் கட்சி தொடங்கிய நேரம் பார்த்து.. பிரபல அரசியல் கட்சியில் இணைந்த விஜய்யின் நண்பர்..!!!

Author: Udayachandran RadhaKrishnan
5 February 2024, 2:27 pm

விஜய் கட்சி தொடங்கிய நேரம் பார்த்து.. பிரபல அரசியல் கட்சியில் இணைந்த விஜய்யின் நண்பர்..!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். கடந்த சில வருடங்களாகவே அரசியலில் நுழைவார் என்ற பேச்சு அடிப்பட்ட போது அவர் இதை மறுக்கவில்லை. விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பை ஆரம்பித்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு அவர் தனது ரசிகர்கள் மூலம் செய்து வந்தார்.

இதையடுத்து கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தேர்தல் ஆணையத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற தனது கட்சி பெயரை பதிவு செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் விஜய்யுடன் பல படங்களில் நடித்தவர் நடிகர் பெஞ்சமின். வடிவேலு உடன் இணைந்து வெற்றிக் கொடிகட்டு படத்தில் அறிமுகமான பெஞ்சமின், பகவதி, சாமி, ஐயா, திருப்பாச்சி, ஆட்டோகிராப், திருப்பதி, வசூல் ராஜா உட்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் அவர் திமுக கட்சியில் இணைந்துள்ளார். சேலம் மாவட்ட திமுக செயலாளரும், எம்எல்ஏவுமான ராஜேந்திரன் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

அவருக்கு எம்எல்ஏ ராஜேந்திரன் சால்வை அணிவித்து கட்சிக்கு வரவேற்று வாழ்த்து கூறினார். திமுகவில் இணைந்தது பற்றி பேசிய பெஞ்சமின், மக்களுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை திமுக அரசு செய்து வருவதாகவும், நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் முழுவதும் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வேன் என கூறியுள்ளார்.

வறுமையால் வாடும் துணை நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களின் நலனுக்காக அறக்கட்டளை ஒன்றை தொடங்கியிருந்த பெஞ்சமின், நலிந்த திரைக் கலைஞர்களின் உடல் நல்லடகத்தை ஏற்று நடத்துவதோடு, அவர்களின் குழந்தைகளின் கல்விக்காகவும் உதவி வருகிறார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 346

    0

    0