கோவை துடியலூர் அருகே உள்ள பன்னிமடை பகுதியில் குடியிருந்து வருபவர் சுபாஷ். இவர் அகில பாரத இந்து மகா சபா தேசிய ஒருங்கிணைப்பளர் மற்றும் மாநில பொதுச் செயலாளராகவும் உள்ளார்.
மேலும் பன்னிமடை, கணுவாய், சோமையம்பாளையம் உள்ளிட்ட இடங்களில் ஹோட்டல் மற்றும் பேக்கரி வைத்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு 9.30 மணியளவில் பன்னிமடையில் உள்ள அவரது ஹோட்டலில் இருந்த போது காரில் மாஸ்க் அணிந்து வந்த 3 பேர் திடீரென அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சுபாஷை தாக்கியுள்ளனர்.
இதையும் படியுங்க : வரலாற்றில் புது உச்சம்.. ரூ.63 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை!
இதில் கை, கால் மற்றும் இடுப்பு பகுதியில் லேசான காயமடைந்த சுபாஷ் ஹோட்டலுக்கு சென்று தப்பினார். அவரை காப்பாற்ற வந்த பார்த்திபன் என்பவரையும் அவர்கள் அரிவாளால் தாக்கியதில் கையில் லேசான காயம் ஏற்பட்டது.
தொடந்து அவர்கள் அங்கிருந்த கார், ஹோட்டலின் கண்ணாடி மற்றும் சாம்பார், சட்னி உள்ளிட்ட உணவுப் பொருட்களையும் சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த தடாகம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதில் சுபாஷ் உள்ளிட்ட இருவரை அரிவாலால் தாக்கி காயப்படுத்தி ஹோட்டலை சூரையாடியது துடியலூர் அருகே உள்ள வி.எஸ்.கே. நகர் பகுதியில் கார் கன்சல்டன்ஸி நடத்தி வரும் அருண் மற்றும் அவரது நண்பர்கள் தனஞ்செயன், அழகர் உள்ளிட்டவர்கள் என தெரியவந்துள்ளது.
மேலும் முன்விரோதம் காரணமாக இந்த தாக்குதல் நடைபெற்று இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.
மனம் உடைஞ்ச சல்மான்கான் பாலிவுட் நடிகர் சல்மான் கான் கடந்த 35 ஆண்டுகளாக இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார்.…
மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது முதல்வர் மு.க. ஸ்டாலின்,கோவையில் உலகத் தரம் வாய்ந்த சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று…
வீடீயோவை தேடி பார்ப்பவர்களுக்கு எச்சரிக்கை சமீபத்தில் சமூக வலைதளங்களில் நடிகை ஸ்ருதி நாராயணனைப் பற்றிய ஆபாச வீடியோ ஒன்று வெளியானது.…
விருதுநகர், மல்லாங்கிணறு பகுதியில் தாயுடன் தகாத உறவில் இருந்த நபரைக் குத்திக்கொலை செய்த மகன் உள்பட இருவரை போலீசார் கைது…
காசநோயால் அவதி தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையாக 1980 மற்றும் 90-களில் விளங்கிய சுஹாசினி,தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,மலையாளம்,கன்னடம் ஆகிய மொழிப்படங்களிலும்…
காங்கிரஸ், திமுகவுக்கு விஜய் தண்ணீர் காட்ட வேண்டும், பாஜகவுக்கு அல்ல என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். டெல்லி:…
This website uses cookies.