மண் லாரி மோதி தாய் மாமன் பலி… நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு வந்த போது நிகழ்ந்த சோகம் : அதிர்ச்சி சிசிடிவி காட்சி..!!
Author: Babu Lakshmanan4 March 2023, 11:25 am
ராணிப்பேட்டை ; நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு பங்கேற்க இருசக்கர வாகனத்தில் வந்த தாய்மாமன் மண் லாரி மோதி உயிரிழந்த சம்பவம் தொடர்பான அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாலாஜாபேட்டை அடுத்த மருதாலம் கூட்ரோடு கஸ்தூரி கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (35). இவர் தனது சகோதரியின் மகள் நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு பங்கேற்க அக்ரா படத்தில் உள்ள திருமண மண்டபத்திற்கு இருசக்கர வாகனத்தில் தனது உறவினர்களுடன் சென்றுள்ளார்.
அப்போது சாலையை கடக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக எதிரே மண் ஏற்றி வந்த லாரி, இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஏழுமலை சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மற்ற இருவர் பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இந்த சம்பவம் குறித்து ராணிப்பேட்டை சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.