தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு.. லாரி உரிமையாளரின் கழுத்தை அறுத்த லாரி புரோக்கர் : முன்விரோத்ததால் நடந்த விபரீதம்!!

Author: Udayachandran RadhaKrishnan
8 July 2022, 10:01 pm

திண்டுக்கல் : முன் விரோதம் காரணமாக லாரி உரிமையாளரின் கழுத்தை கத்தியால் அறுத்த லாரி புரோக்கரால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் ராஜகோபாலபுரத்தை சேர்ந்தவர் கார்த்தி. இவர் சொந்தமாக லாரிகள் வைத்து வாடகைக்கு ஓட்டி வரும் தொழில் செய்து வருகிறார்.

இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த லாரிக்கு வாடகை பிடித்து விடும் புரோக்கரான ரமேஷ் என்பவருக்கும் இடையே முன்பகை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இன்று ஆத்துமேட்டில் நடந்து சென்று கொண்டிருந்த ரமேஷின் மீது கார்த்திக் ஒட்டி வந்த கார் லேசாக மோதியது. இதில் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

இருவரும் கட்டி புரண்டு ரோட்டில் உருண்டு சண்டை போட்டனர். அப்பொழுது கார்த்திகை கீழே தள்ளி அவரின் மீது ஏறி உட்கார்ந்த ரமேஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கார்த்திக்கின் கழுத்தை அறுக்க ஆரம்பித்தார்.

இதனை பார்த்த ஆத்துமேடு வேன் ஸ்டாண்ட் ஓட்டுனர்களும் அக்கம் பக்கத்தினரும் ஓடி வந்து தடுத்தனர். தடுக்க வருபவர்களையும் ரமேஷ் கத்தியைக் காட்டி மிரட்டினார். ஆனாலும் அருகில் இருந்த நபர்கள் துணிந்து கார்த்திக்கை காப்பாற்றி வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர். அதன் பின்னர் கார்த்திக் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

கார்த்திக்கின் கழுத்தை அறுத்த ரமேஷ் அங்கிருந்து தப்பி ஓடி வேடசந்தூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார். இந்த சம்பவம் குறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். லாரி உரிமையாளரின் கழுத்தை பட்ட பகலில் லாரி புரோக்கர் அறுத்த சம்பவம் வேடசந்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 831

    0

    0