கோர விபத்து… பைக் மீது மோதிய லாரி : துடித்துடித்து உயிரிழந்த வாகன ஓட்டி!!
Author: Udayachandran RadhaKrishnan13 January 2025, 10:54 am
கோவை மாவட்டம் சூலூர் திருச்சி சாலையில் நேற்று மதியம் நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரு இளைஞர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கண்ணம்பாளையத்தைச் சேர்ந்த மணி என்பவரின் மகன் கார்த்திக் (38). காங்கேயம் பாளையம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஓட்டுனராக வந்தார். சம்பவத்தன்று மதியம் கார்த்திக் சூலூர் திருச்சி சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் கோவை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது பின்னால் வந்த லாரி அவரது இருசக்கர வாகனத்தில் மோதியது. இந்த சம்பவத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த கார்த்திக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சூலூர் காவல் நிலைய போலீசார், கார்த்திக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து, 281, 106(1) BNS என்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.