டீக்கடைக்குள் புகுந்த லாரி… விபத்தில் சிக்கிய குழந்தை : 5 பேர் படுகாயங்களுடன் அனுமதி!

Author: Udayachandran RadhaKrishnan
5 April 2025, 2:32 pm

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மெட்டாலா பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற மெட்டாலா ஆஞ்சநேயர் கோவிலானது அமைந்துள்ளது. கோவிலில் இன்று திருவிழா நடைபெற உள்ள நிலையில் அதற்கான பணிகள் கோவில் நிர்வாகம் சார்பில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ஆத்தூர் சாலையில் இருந்து மெட்டாலா பகுதியில் இருந்து லாரி ஆனது ராசிபுரத்தை நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில் அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் உள்ள டீக் கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது.

இதையும் படியுங்க: 17 வயதுல அந்த மாதிரியான படத்தில்.. தலைகாட்ட முடியல.. என் அப்பாதான் : அமலா பால் பகிர்ந்த உண்மை!

விபத்தில் கடையில் இருந்த குழந்தை உட்பட 5 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்

மேலும் விபத்து அடைந்த லாரியிலிருந்து டீசல் கசிவு ஏற்பட்டு வருவதால் சம்பவ இடத்தில் தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் சம்பவ இடத்தில் தப்பி சென்ற நிலையில் விபத்து தொடர்பாக நாமகிரிப்பேட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Lorry crashes into tea shop… Child involved 5 people admitted in hospital

இந்த நிலையில் மெட்டாலா ஆஞ்சநேயர் கோவிலில் நாளை தீமிதி திருவிழாவானது மாலை நடைபெற உள்ள நிலையில் தற்போது விபத்து நடைபெற்றதால் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

  • Sex is for pleasure, not for having a baby: Famous actress's bold comment உடலுறவு என்பது மகிழ்ச்சிக்காக.. குழந்தை பெற்றுக்கொள்ள அல்ல : பிரபல நடிகை அதிரடி கருத்து!
  • Leave a Reply