சொகுசு பேருந்துக்குள் சிக்கிய லாரி… அதிவேகமாக வந்த லாரியால் கோர விபத்து : இடிபாடுகளுக்குள் சிக்கிய லாரி ஓட்டுநர் பரிதாப பலி!!
Author: Udayachandran RadhaKrishnan16 September 2022, 1:33 pm
திண்டுக்கல் சித்தையன்கோட்டை அருகே தனியார் சொகுசு பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் லாரி ஓட்டுனர் பரிதாபமாக பலியானார்.
சென்னையில் இருந்து தனியார் சொகுசுப் பேருந்து சுமார் 40 பயணிகளுடன் கம்பம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்தப் பேருந்தை கம்பம் அனுமந்த பட்டியைச் சேர்ந்த ஓட்டுனர் மணி என்பவர் ஓட்டிக்கொண்டு வந்தார்.
அதேபோல் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் இருந்து தனியார் லாரியில் செங்கலை ஏற்றி கொண்டு ஓட்டுநர் மாடசாமி என்பவர் கோவையை நோக்கி லாரியில் சென்று கொண்டிருந்தார்
இந்நிலையில் இன்று காலை ஆத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட திண்டுக்கல் வத்தலகுண்டு சாலையில் சித்தையன் கோட்டை போடிகாமன்வாடி அருகே பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதியது.
பேருந்தக்குள் லாரி புகுந்தது. இதில் பேருந்தில் பயணம் செய்த டிரைவர் உட்பட சுமார் 10 பேர் படுகாயம் அடைந்தனர் தகவல் அறிந்த செம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
லாரி டிரைவர் மாடசாமி இடிபாடுகளுக்குள் மாட்டிக்கொண்டார். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடியும் லாரி டிரைவரை உயிருடன் மீட்க முடியவில்லை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்
மேலும் பேருந்தில் பயணம் செய்த தேனி மற்றும் பெரியகுளம் கம்பம் பகுதிகளை சேர்ந்த சுமார் பத்து பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்த அனைவரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பேருந்து ஓட்டுனர் மணி மற்றும் மற்றோரு ஓட்டுனர் சிவகுமார், நந்தினி, ரபிக் கிறிஸ்டோபர், சண்முகவள்ளி சுரேந்திரன், பரமசிவம், முத்துமணி உட்பட சுமார் 10 பேர் காயங்களுடன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து செம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்