மகளிர் இலவச பேருந்தால் வருவாய் இழப்பு… தென்காசி ஆட்சியரின் பேச்சால் சர்ச்சை!!

Author: Babu Lakshmanan
3 May 2023, 4:25 pm

தென்காசியில் மகளிர் இலவச பேருந்தால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஆட்சியர் துரை.ரவிசந்திரன் பேச்சால் சர்ச்சை எழுந்துள்ளது.

தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை.ரவிச்சந்திரன் தலைமையில் மே 1ம் தேதி ஆலங்குளம் ஒன்றியத்திற்க்கு உட்பட்ட வாடியூர் பஞ்சாயத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அப்போது, மாவட்ட ஆட்சியர் இலவசமாக மகளிர் பேருந்தில் செல்வதினால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதனால், கிராமத்திற்கு பேருந்து சேவை பாதிக்கப் பட்டுள்ளதாகவும், இதுகுறித்து அதிகாரியிடம் தெரிவித்து பேருந்து சேவை மீண்டும் தூங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

  • Vidamuyarchi total earnings worldwide போராடும் ‘விடாமுயற்சி’…இறுதி கட்டத்தை நோக்கி படத்தின் வசூல்.!