விழுப்புரம் : ஆவின் நிர்வாகத்திற்கு வாங்கப்பட்ட உபகரணங்கள் சரியாக பயன்படுத்தாதால் அரசுக்கு 26 கோடியே 88 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதால் உபகரணங்களை சரியாக பயன்படுத்தாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுக்கணக்குழு தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் குழு உறுப்பினர்கள் வேல்முருகன் சிந்தனை செல்வன் உள்ளிட்டோர் விழுப்புரத்திலுள்ள ஆவின் நிறுவனம் கப்பூர் அரசு ஆதிதிராவிட விடுதி, அரசு மாதிரி மேல்நிலைபள்ளி உள்ளிட்ட ஆறு இடங்களில் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்விற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பொதுகணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை, 2018 -19 ஆம் ஆண்டு 26 கோடியே 88 லட்சம் மதிப்பீட்டில் ஆவின் நிர்வாகத்திற்கு வாங்கப்பட்ட உபகரணங்கள் சரியாக பயன்படுத்தாதால் 26 கோடியே 88 லட்சம் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ஒன்றிய அரசிடம் இருந்து பெறப்பட வேண்டிய மான்யம் 11 கோடியே 52 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதற்கு காரணமாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கடந்த ஆட்சியில் சோலார் 1 கேவி வாங்க ஒரு லட்சம் தேவை படுகின்ற நிலையில் 3 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளதால் 54 லட்சம் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அரசு வழங்கிய நிதியை சரியாக பயன்படுத்தாமலும் தவறாகவும் கடந்த ஆட்சியில் பயன்படுத்தி உள்ளதாக கூறினார்.
அதனை தொடர்ந்து பேசிய அவர் 25 கோடியே 38 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக தளவானூரில் கட்டப்பட்ட தடுப்பனை மூன்று மாதங்களிலேயே உடைந்ததால் தடுப்பனையை மறு சீரமைப்பு செய்ய 40 கோடி மதிப்பீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ள உள்ளதாகவும் கப்பூரிலுள்ள ஆதிதிராவிட நலத்துறை விடுதி மோசமான நிலையில் உள்ளதால் துறை செயலர் ஜவகர் விடுதியை ஆய்வு செய்ய அறிவுறுத்தியுள்ளதாக செல்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
சென்னையில், இன்று (மார்ச் 4) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 70 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 10…
கோவை சூலூர் அருகே மாயமான பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை தேர்வு எழுத வைத்த காவல் ஆய்வாளரின் செயலை பல்வேறு தரப்பினரும்…
ராஷ்மிகா மந்தனா கன்னடத்தைப் புறக்கணிப்பதாக அம்மாநில காங்கிரஸ் எம்எல்ஏ குற்றம் சாட்டியுள்ள நிலையில், இவ்விவகாரம் பூதாகரமாகியுள்ளது. பெங்களூரு: இது தொடர்பாக…
நடிகர் விஜய் முதலில் பத்திரிகையாளர்களைச் சந்திக்கட்டும், அதற்கு பிறகு நீங்கள் அவரிடம் கேள்வி கேளுங்கள் என நடிகர் விஷால் கூறியுள்ளார்.…
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
This website uses cookies.