கண்ணை மறைத்த கள்ளக்காதல்… பறிபோன பிஞ்சு உயிர்கள்.. கணவன் எடுத்த விபரீதம் : கதிலகலங்கிய சென்னை!

Author: Udayachandran RadhaKrishnan
12 May 2024, 12:33 pm

கண்ணை மறைத்த கள்ளக்காதல்… பறிபோன பிஞ்சு உயிர்கள்.. கணவன் எடுத்த விபரீதம் : கதிலகலங்கிய சென்னை!

சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்தவர் மோகன். 55 வயதாகும் இவர் இவர் ராயபுரத்தில், இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி பெயர் யமுனா. 35 வயதாகும் இவர் அந்த பகுதியிலுள்ள பிரிண்டிங் பிரஸ்ஸில் வேலை பார்த்து வருகிறார்.

இவர்களுக்கு சாய் ஸ்வாதி என்ற 13 வயது மகளும், தேஜஸ் என்ற 5 வயது மகனும் உள்ளனர். சாய் ஸ்வாதி 9-ம் வகுப்பும், தேஜஸ், யுகேஜி படித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், மோகனுக்கும் யமுனாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம், மோகன் மீது சைதாப்பேட்டை மகளிர் ஸ்டேஷனில், யமுனா புகாரளித்தார்.

பிறகு பிள்ளைகள் இருவரையும் அழைத்துக்கொண்டு தனியாக வந்துவிட்டார் யமுனா. வாடகைக்கு ஒரு வீட்டை பிடித்து அங்கு வசித்து வந்தார்.

இந்நிலையில், குழந்தைகளை பார்க்காமல் தவித்து போன மோகன், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு, யமுனாவை தேடி, அவர் குடியிருந்த வீட்டுக்கு வந்தார். அப்போது, “இனிமேல் தகராறு செய்ய மாட்டேன்” என்று வாக்குறுதி தந்து, குழந்தைகளுக்காக ஒன்றாக வாழலாம் என்று யமுனாவை சமாதானம் செய்து ஒன்றாக சேர்ந்து வசித்தனர்,

மேலும் படிக்க: பூர்வகுடி மக்களை வெளியேற்றி சட்டத்தின் நெறிகளை மீறி செயல்பட்ட வனத்துறை, காவல்துறை ; இபிஎஸ் கண்டனம்!

இந்நிலையில், நேற்று மாலை 6.30 மணிக்கு, வேலை முடிந்து வீட்டுக்கு வந்தார் யமுனா. அப்போது, கதவு உள்பக்கமாக பூட்டியிருந்தது. நீண்ட நேரமாக தட்டியும் யாரும் திறக்காததால், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, சாய் ஸ்வாதி கழுத்தறுக்கப்பட்டும், தேஜஸ், கழுத்தை நெறிக்கப்பட்டும், மோகன் தூக்கில் தொங்கியும் சடலமாக கிடந்தனர்.

இதைப்பார்த்து கதறி அழுத யமுனா குமரன் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்தனர். 3 பேரின் சடலங்களையும் கைப்பற்றி விசாரணையும் மேற்கொண்டனர்.

மகளையும் மகனையும் கொன்றுவிட்டு, மோகன் தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. பிறகு யமுனாவிடம் விசாரணை ஆரம்பமானது. தன் மீதுள்ள ஆத்திரத்தில் குழந்தைகளை கொன்றுவிட்டதாக அழுதுகொண்டே சொன்னார் யமுனா.

விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. யமுனாவுக்கு வேறு ஒருவருடன் கள்ளக்காதல் இருந்துள்ளது. இந்த விஷயம் மோகனுக்கு தெரிந்து, மனைவியை கண்டித்திருக்கிறார்.

ஆனாலும், கள்ளக்காதலை கைவிடாத யமுனா, ஆத்திரமடைந்த கணவன் தட்டிக்கேட்டுள்ளார். நேற்றைய தினமும், இதே பிரச்சனை தம்பதிக்குள் வெடித்துள்ளது.

பிறகு யமுனா வேலைக்கு கிளம்பி சென்று விட்டார். வீட்டில் குழந்தைகளோடு இருந்த மோகன், மனைவியின் நடத்தையை கண்டு கடும் மனஉளைச்சலுக்கு ஆளானார்.

தற்கொலை செய்து கொள்ளவும் முடிவு செய்து, குழந்தைகளை கொல்லவும் துணிந்தார். மகளின் கழுத்தை கத்தியால் அறுத்தார்.. எல்கேஜி படிக்கும் மகனை, கயிற்றால் கழுத்தை நெரித்து கொன்றார். பிறகு தானும் தூக்கு போட்டு கொண்டது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் தொடர் விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள்.

  • Keerthy Suresh new glamorous look கவர்ச்சி உடையில் பிரபல நடிகருடன் குத்தாட்டம்…வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ..!
  • Views: - 492

    0

    0