கோவை : ஆப்பிரிக்க கிறிஸ்துவ பெண்ணை இந்து முறைப்படி வேத மந்திரம் ஓத, மங்கள வாத்தியங்கள் இசைக்க, தாலி கட்டி அம்மி மிதித்து மெட்டி அணிவித்து தமிழக இளைஞர் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்தார்.
கோவில்பட்டியைச் சேர்ந்த சுப்பிரமணியம், தர்மலட்சுமி ஆகியோரின் மகன் முத்துமாரியப்பன் இவர் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு மேற்கு ஆப்பிரிக்கா நாட்டில் உள்ள கேம்ரூனிற்கு சென்று அங்குள்ள ஆயில் மற்றும் கேஸ் நிறுவனத்தில் சி.என்.சி. மெசின் ஆப்ரேட்டராக பணியாற்றி வந்துள்ளார்.
அங்கு முத்துமாரியப்பன் பணிபுரிந்த அதே நிறுவனத்தில் அக்கவுண்டண்டாக பணியாற்றி வந்த எம்மா எஞ்சிமா மொசொக்கே என்பவரின் மகளான வால்மி இனாங்கா மொசொக்கே ஆகிய இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.
கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்த இவர்கள் இருவரின் வீட்டாரும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து விட்டனர்.
இதில் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த மணப்பெண்ணான வால்மி இனாங்கா மொசொக்கே இந்தியாவிற்கு சென்று இந்து முறைப்படி தாலி கட்டி திருமணம் செய்ய வேண்டும் என தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.
இதற்கு அவரது தாயாரும் உறவினர்களும் சம்மதம் தெரிவிக்க உறவினர்கள் 10 பேருடன் இந்தியா வந்துள்ளார். இந்த நிலையில் இன்று கோவை துடியலூர் அருகே உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் உறவினர்கள் புடைசூழ வெகு விமர்சையாக இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது.
இதில் மணமகளை பட்டுபுடவை கட்டி அவரது உறவினர்கள் மலர் பந்தலின் கிழ் ஊர்வலமாக மணமேடைக்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து புரோகிதர் வேத மந்திரம் ஓத ஆப்பிரிக்க மணப்பெண்ணான வால்மி இனாங்கா மொசொக்கேவிற்கு தமிழக மணமகன் முத்துப்பாண்டி தாலி கட்டினார்.
தொடர்ந்து இருவரும் மாலை மாற்றிக்கொண்டு அம்மி மிதித்து மெட்டி அணிவித்தார்.அதேபோல் கிறிஸ்தவ முறைப்படி இருவரும் ஒருவருக்கொருவர் மோதிரம் அணிவித்தனர். தொடர்ந்து உணவினர்களிடம் ஆசிபெற்றுக்கொண்டு குழு புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்.
இது குறித்து பேசிய மணப்பெண் வால்மி இனாங்கா மொசொக்கே வணக்கம் என தமிழில் தொடங்கி இந்தியக் கலாச்சாரம் தனக்கு மிகவும் பிடிக்கும் எனவும், இந்தியர்களை பிடிக்கும் எனவும் அதனால் இந்து முறைப்படி திருமணம் செய்ய ஆசைப்பட்டதாகவும் பெற்றோரும் சம்மதம் தெரிவித்ததால் இந்தியா வந்து திருமணம் செய்துள்ளதாகவும் இதன் மூலம் தானும் இந்தியாவில் ஒருவர் ஆகிவிட்டதாகவும் இது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவித்தார்.
விஜய் டிவியில் ஆன்கராக நுழைந்த பிரியங்கா தேஷ்பாண்டே, கொஞ்ச கொஞ்சமாக எல்லா நிகழ்ச்சிகளிலும் தன்னுடைய திறமையை காட்ட ஆரம்பித்தார். இதையும்…
தர்பூசணி குறித்து மக்கள் மத்தியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தவறான கருத்துக்களை பரப்பியிருந்தார். தர்பூசணி பழத்தல் ரசாயணம் உள்ளது…
லோகேஷ் பட ஹீரோ லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை வைத்து இயக்கி வரும் “கூலி” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இத்திரைப்படத்தின்…
கராத்தே பாபு “ஜீனி” என்ற திரைப்படத்தை தொடர்ந்து ரவி மோகன் தற்போது நடித்து வரும் திரைப்படம் “கராத்தே பாபு”. இத்திரைப்படத்தில்…
படப்பிடிப்பில் முன்னணி நடிகர் ஒருவர் போதையில் தன்னிடம் அத்துமீறியதாக பிரபல நடிகை பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார். இதையும் படியுங்க: சண்ட போட்டு…
தமிழகத்தில் சில கல்வி நிறுவனங்கள் சாதி பெயர்களில் செயல்பட்டு வருகிறது. அந்த கல்வி நிறுவனம் பயன்படுத்தும், வாகனம், கல்வி வளாகத்தில்…
This website uses cookies.