கோவை ; காதலித்து மதம்மாறி திருமணம் செய்துவிட்டு, வரதட்சணை கேட்டு கணவன், மாமியார், மிரட்டுவதாக பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.
கோவை மாவட்டம் கோட்டைப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிரியதர்ஷினி(23). இவர் கல்லூரியில் படிக்கும்போது, அமனுதீன் என்பவரை காதலித்துள்ளார். அமனுதீன் பெற்றோரின் சம்மதத்துடன், பிரியதர்ஷினியை மதம் மாற்றி மதினா என்ற பெயருடன் 2018ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
வேலை நிமித்தமாக திருப்பூரில் தங்கியிருந்த போது, 2020 ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்ததையடுத்து அமனுதீன் வீட்டிற்கு வருவதில்லை என மாமனார் ஜாஹீர் உசைன், மாமியார் ஹம்ரூன் நிஷா ஆகியோரிடம் சொன்னபோது, வரதட்சணை கேட்டு மிரட்டியுள்ளனர்.
காவல் நிலையத்தில் புகாரளித்து விடுவேன் என பிரியதர்ஷினி கூறியதையடுத்து, கணவர் அமனுதீன் வீட்டிற்கு வருவதை மூன்று மாதமாக நிறுத்திவிட்டார். மேட்டுப்பாளையத்தை சேர்ந்த பெனாசீர் என்ற திருமணமான பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து, அமனுதீன் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
அமனுதீனுடன் பெனாசீர் இருப்பதை பார்த்த அவரது கணவர் தற்கொலை செய்துகொண்டதால், உனது கணவரை திருமணம் செய்து கொண்டதாகவும் கூறியுள்ளார். இனிமேல் நீ வீட்டிற்கு வந்தால், ஜமாத் ஆட்களை வைத்து கொலை செய்துவிடுவதாக பெனாசீர் மிரட்டியுள்ளார். ஒரு லட்ச ரூபாய் வாங்கிவிட்டு, பிரிந்துவிடும்படி ஜமாத்தினர் பிரியதர்ஷினியிடம் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
மேட்டுப்பாளையம் மகளிர் காவல் நிலையத்தில் பிரியதர்ஷினி என்கிற மதினா, தன்னை வரதட்சண கேட்டு கணவர், மாமனார், மாமியார் கொடுமைப்படுத்துவதாகவும், பெனாசீர் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறி புகாரளித்துள்ளார். விசாரணைக்கு அழைத்த காவல் ஆய்வாளர் ஒரு லட்சம் வாங்கிவிட்டு போகும்படி மிரட்டியுள்ளார்.
தனக்கும், குழந்தைக்கும் பாதுகாப்பு அளித்து லவ்ஜிகாத் என்கிற பெயரில், தன்னை ஏமாற்றியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்தார்.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.