அண்ணன் தங்கை உறவை மீறி காதல் : பெற்றோர் எதிர்ப்பால் விஷம் அருந்திய ஜோடிகள்..முடிவில் நடந்த விபரீதம்!!

Author: Udayachandran RadhaKrishnan
17 April 2022, 3:07 pm

தேனி : அண்ணன் தங்கை உறவு என்பதால் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தால் காதல் ஜோடி விஷம் அருந்திய நிலையில் காதலி பரிதாபமாக உயிரிழந்தார்.

தேனி மாவட்டம் பெரியகுளம் பட்டாப்புளி தெருவை சேர்ந்த நல்லயன் மகள் நித்யா (வயது 19). இவர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வருவதாகவும் மற்றும் அதே பகுதியை சேர்ந்த மணி மகன் பெரியசாமி (வயது 21) ஆகிய இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

இவர்கள் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்து உள்ளனர். இவர்கள் இருவரும் அண்ணன் தங்கை உறவு என்பதால் இவர்களின் திருமணத்திற்கு இரு வீட்டார் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

எனவே நேற்று இரவு இருவரும் வீட்டை விட்டு கிளம்பி தேவதானப்பட்டி அருகே உள்ள தனியார் கல்லூரி பின்புறம் உள்ள பகுதியில் இருவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்ய முடிவு செய்து விஷம் அருந்தியுள்ளனர்.

அதில் கல்லூரி மாணவி உயிரிழந்த நிலையில் இளைஞர் எழுந்து அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்றவர்களிடம் உதவி கேட்டு உள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் தேவதானப்பட்டி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்க விரைந்து வந்த காவல் துறையினர் உயிருக்கு போராடிய இளைஞரை பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவ மனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் உயிரிழந்த கல்லூரி மாணவியின் உறவினர்களுக்கு தெரியப்படுத்தி இறந்த மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்கு தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது குறித்து பல்வேறு கோணங்களில் தேவதானப்பட்டி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!