நள்ளிரவில் நீதிமன்றத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடிகள்… காதலர் தினத்தில் பரபரப்பு தீர்ப்பு வழங்கிய நீதிபதி!!

Author: Udayachandran RadhaKrishnan
14 February 2023, 3:38 pm
Lovers - Updatenews360
Quick Share

திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் அகிலாண்டபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுந்தரம் என்பவரது மகன் சந்துரு. அதே பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவரது மகள் தர்ஷினி.

சந்துரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில் கல்லூரி படிப்பை முடித்து வீட்டில் இருக்கும் தர்ஷினி ஆகியோர் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இந்த காதல் விவகாரம் தர்ஷினியின் பெற்றோருக்கு தெரிய வந்த நிலையில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தர்ஷினியை அவரது பெற்றோர் வீட்டிலேயே அடைத்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

எப்படியாவது என்னை காப்பாற்றி அழைத்து செல்லுமாறு தர்ஷினி சந்துருவுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார்.கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த தர்ஷினி காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் அவிநாசிபாளையம் காவல் நிலையத்தில் தனது மகளை சந்துரு கடத்தி சென்று விட்டதாக புகார் அளித்துள்ளனர்.

இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் இருவரையும் தேடி வந்த நிலையில் சந்துரு மற்றும் தர்ஷினி இருவரும் பழனியில் பதிவு திருமணத்தை முடித்துக் கொண்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தால் இருவரையும் பிரித்து விடுவார்கள் என எண்ணி பல்லடம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நேற்று இரவு தஞ்சம் அடைந்தனர்.

கடத்தப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்ட தர்ஷனியை நீதிபதி விசாரணை மேற்கொண்டதில் எனது விருப்பப்படியே சந்துருவுடன் சென்றேன் எனவும் அவரை திருமணம் செய்து கொண்டேன் எனவும் வாக்குமூலம் அளித்தார்.

மேலும் சந்துருவுடன் செல்வதே தனது விருப்பம் என கூறினார். விசாரணையின் முடிவில் தர்ஷினி மற்றும் சந்துரு ஆகியோர் மேஜர் என்பதால் அவர்களின் பதிவு திருமணம் செல்லும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

இருவரையும் பல்லடம் காவல்துறையினர் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். புதுமண காதல் ஜோடிகள் பல்லடம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தஞ்சம் அடைந்த தகவல் கிடைத்து அங்கு அவர்களது உறவினர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

  • Vijay கமலுக்கு No.. சீமானுக்கு Yes.. விட்டுக் கொடுக்காத விஜய்
  • Views: - 721

    0

    0