காஞ்சிபுரம் ; காதல் விவகாரத்தில் இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மண்ணூர் பகுதியை சேர்ந்தவர் மோகன். இவரது மகன் நிரஞ்சன் (21) ஓட்டுனராக வேலை செய்து வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ரம்யா (19) என்பவரை காதலித்து வந்துள்ளார்.
காதல் விவகாரம் ரம்யாவின் வீட்டிற்கு தெரிய வந்துள்ளது. இதனால், ஆத்திரமடைந்த ரம்யாவின் பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். இருப்பினும், அவர் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி தானாக புறப்பட்டு நிரஞ்சன் வீட்டிற்கு சென்றுள்ளார்.
பின்னர், பெரியவர்கள் சமாதானம் செய்து ரம்யாவை அழைத்துச் சென்றுள்ளனர். இதனால், ரம்யாவின் பெற்றோர் அவரை திருவள்ளூர் மாவட்டம் புள்ளரம்பாக்கத்தில் உள்ள ரம்யாவின் பாட்டி வீட்டில் தங்க வைத்திருந்ததாகவும், இதனை அறிந்து அங்கு சென்ற நிரஞ்சனை கண்டித்து அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த 22 ஆம் தேதி ரம்யாவின் தாய் மாமன்களான புகழேந்தி மற்றும் ஜனார்த்தனன் இருவரும் நிரஞ்சன் வீட்டிற்கு வந்து, வீட்டில் இருந்தவரை கட்டை மற்றும் கம்பியால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயம்பட்ட நிரஞ்சன் என்பவருக்கு இடது கன்னத்தில் வீக்கம் மற்றும் இடது காதுக்கு பின்னால் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
பின்னர், நிரஞ்சன் சுயநினைவை இழந்து சவீதா மருத்துவமனையில் கடந்த 22ம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி தற்போது இறந்து போனார்.
இதையடுத்து, காதல் விவரத்தில் இளைஞரை கண்மூடித்தனமாக தாக்கிய வழக்கில் கைதாகி சிறையில் உள்ள ஜனார்த்தனன், புகழேந்தி ஆகிய இருவர் மீதும் தற்போது ஸ்ரீபெரும்புதூர் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கிங்ஸ்டன் பட விழாவில் எஸ் தாணு பேச்சு தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி தற்போது பல படங்களில்…
பீல் பண்ண ஷ்ரேயா கோஷல் இந்தியாவின் புகழ்பெற்ற பாடகியாக இருப்பவர் ஷ்ரேயா கோஷல்,இவர் ஹிந்தி மொழியை தாய்மொழியாக கொண்டிருந்தாலும் தமிழ்,தெலுங்கு,மலையாளம்…
பட்டையை கிளப்பும் அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படத்தின் டீசர் வெளியாகி…
சீர்காழி குழந்தை பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தில் 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர்…
குட் பேட் அக்லி என்ன கதை அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின்…
கங்குவா படத்தை போல் மாற்றி விடாதீர்கள்.! தமிழ் சினிமாவில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த ஈரம் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள்…
This website uses cookies.