காதல் திருமணம்.. 5 மாதங்களில் இளம் பெண் தற்கொலை : விசாரணையில் திடுக்கிடும் தகவல்!!!

Author: Udayachandran RadhaKrishnan
8 December 2023, 12:56 pm

காதல் திருமணம்.. 5 மாதங்களில் இளம் பெண் தற்கொலை : விசாரணையில் திடுக்கிடும் தகவல்!!!

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே மூங்கில்குடி ஆற்றங்கரை பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகன் மனோஜ். இவர் திருவாரூரில் உள்ள பிரபல ஜவுளி கடையில் வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு குடவாசல் அருகே புதுக்குடி சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்த சிராளன் என்பவரது மகள் சசி பிரியாவும் மனோஜின் ஜவுளிக்கடையில் வேலை பார்க்கும் பொழுது இருவருக்கும் காதல் ஏற்பட்டு ஒரு வருடமாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு மனோஜ் வீட்டார் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில் மனோஜ் வழக்கம் போல ஜவுளி கடைக்கு வேலைக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் வீட்டின் அறையில் சத்தம் கேட்டதை அறிந்த மனோஜின் பெற்றோர்கள் கதவை உடைத்து பார்த்த பொழுது சசிபிரியா மின்விசிறியில் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் நன்னிலம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர் மேலும் சுகப்பிரியா பெற்றோர்கள் நன்னிலம் காவல் நிலையத்தில் மகள் இறப்பில் சந்தேகம் உள்ளதாக புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Sanam Shetty Instagram dance ஆட சொன்னா என்னமா பண்ற…புஷ்பா 2 பாடலுக்கு குத்தாட்டம் போட்ட பிக் பாஸ் பிரபலம்..கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்…!
  • Views: - 525

    0

    0