திருப்பூரை சேர்ந்த 17 வயசு சிறுவன் மற்றும் 15 வயது சிறுமிக்குமிடையே இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் கடந்த சில மாதங்களாக இன்ஸ்டாகிராம் மூலம் தகவல்களை பரிமாறி வந்துள்ளனர். இது நாளடைவில் காதலாக மாறியது.
இதனையடுத்து சிறுமி தன்னிடம் சிறிய அளவிலான செல்போன் தான் உள்ளது எனக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய போன் வாங்கி தரும்படி காதலனிடம் கேட்டுள்ளார். அதற்கு சிறுவன் தன்னிடம் தற்போது பணம் இல்லை நீ வேண்டுமென்றால் பணம் எடுத்து வா உனக்கு புதிய செல்போன் வாங்கி தருகிறேன் என்று கூறியுள்ளார்.
மேலும் உன்னையும் நேரில் பார்க்க வேண்டும் எனக் கூறியுள்ளார். இந்த நிலையில் சிறுமி வீட்டிலிருந்த தனது தாயின் 7 பவுன் நகையை எடுத்துக்கொண்டு காதலனை பார்க்க திருப்பூர் மத்திய பஸ் நிலையம் வந்தார்.
அங்கு காதலனை சந்தித்து நகையை கொடுத்துள்ளார். சிறுவன் நகையை விற்று அதில் கிடைத்த பணத்தின் மூலம் இருவருக்கும் தலா ரூ.1 லட்சம் மதிப்பிலான ஐ போன்களை வாங்கி உள்ளனர். பின்னர் இருவரும் திருப்பூரில் பல்வேறு இடங்களில் சுற்றி பார்த்துவிட்டு வீட்டிற்கு சென்று விட்டனர்.
இந்த நிலையில் வீட்டிலிருந்த நகை காணாமல் போயிருப்பதை கண்டு சிறுமியின் தாய் அதிர்ச்சி அடைந்தார். சிறுமி புதிய ஐபோன்னை பயன்படுத்தியதை பார்த்த தாயார் உனக்கு எப்படி இந்த போன் வந்தது என்று கேட்டபோது அவர் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தெரிவித்தார்.
தொடர்ந்து கேட்டபோது அவர் நகையை எடுத்துச் சென்றதை ஒப்புக்கொண்டார் மேலும் காதலுடன் சேர்ந்து செல்போன் வாங்கியதையும் கூறினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் திருப்பூர் வடக்கு மகளிர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவனை அழைத்து விசாரணை நடத்திய போது அவனும் உண்மையை ஒத்துக் கொண்டார்.
பின்னர் சிறுவனிடம் இருந்த செல் போன் மற்றும் பணத்தை பறிமுதல் செய்ததோடு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் வயது மூப்பு காரணமான காலமானார். அவருக்கு வயது 93. நேற்று இரவு 12.30…
நள்ளிரவில் பாஜக தலைவர் வீட்டில் குண்டு வெடித்ததால் பதற்றம் உருவாகியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த மனோரஞ்சன் காலியா முன்னாள் எம்எல்ஏவாக…
படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…
பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
This website uses cookies.