காதலி பேசாததால் ஆத்திரம்… காதலியின் கழுத்தை அறுத்து விட்டு தற்கொலைக்கு முயன்ற காதலன்..!

Author: Babu Lakshmanan
5 August 2022, 4:38 pm

திருச்செந்தூர் அருகே காதலியை கத்தியால் கழுத்தை அறுத்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற காதலனால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்செந்தூர் அருகே உள்ள நா. முத்தையாபுரம் வடக்கு தெருவை சேர்ந்த வன சந்தியா (20). இவர் உடன்குடி அருகில் உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் படித்து வருகிறார். இவரும், அதே ஊரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் கார்த்திக் (21). என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் காதல் விவகாரம் வன சந்தியாவின் தந்தைக்குத் தெரிந்தது.

இதனால் வனசந்தியா கார்த்திக்கிடம் பேசி, பழகுவதை தவிர்த்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக் வனசந்தியா வீட்டிற்குள் சென்றுள்ளார். அங்கு வனசந்தியா மட்டும் வீட்டில் இருந்துள்ளார். தன்னிடம் பேசும் படி கார்த்திக் வற்புறுத்தியுள்ளார். அதற்கு வனசந்தியா மறுப்பு தெரிவித்ததை அடுத்து, கார்த்திக் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வனசந்தியா கழுத்தை அறுத்துள்ளார்.

பின்னர், வீட்டிற்கு சென்று நான் சாகப் போகிறேன் என குடும்பத்தாரிடம் தெரிவித்துவிட்டு வீட்டில் உள்ள அறையை பூட்டிக்கொண்டு பேனில் சேலையினால் தூக்கு போட்டுள்ளார். இதனைப் பார்த்த அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மேலும் கழுத்து அறுக்கப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்த வனசந்தியாவை அவரது குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 615

    0

    0